தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பாண்டிராஜ். இவர் மெரினா, கோலிசோடா, கதகளி, வம்சம், பசங்க, பசங்க 2, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன், இது நம்ம ஆளு உள்ளிட்ட பல படங்களை இயக்கிவர்.
சிவகார்த்திகேயன், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், அருள்நிதி, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய பாண்டிராஜ், இப்போது நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். திருச்செந்தூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கிறார். இதற்காக ஒரு மாத காலம் பரோட்டா தயாரிக்கும் பயிற்சியில் விஜய் சேதுபதி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மிஷ்கின் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது மதுரையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில், தொடர்ந்து விடுமுறை விடாமல் இயக்குனர் பாண்டிராஜ் படப்பிடிப்பை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 31ம் தேதியன்று தீபாவளி பண்டிகை நாளிலும் ஷூட்டிங்கை நடத்தி இருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி உலக மக்களே கொண்டாடும் முக்கிய விழா. அதற்கு கூட விடுமுறை விடாமல் படப்பிடிப்பை பாண்டிராஜ் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விடுமுறை விட்டால் மீண்டும் அதே செட்டப்பில் படப்பிடிப்பை நடத்துவது சிரமம் என்பதால் தொடர்ச்சியாக விடுமுறை விடாமல் படப்பிடிப்பை நடத்தியதாக தெரிகிறது.
அதே வேளையில் இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி, விஜய் டிவியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறார். அதன் காரணமாகவும் படப்பிடிப்பை அவர் நடத்தியதாக தெரிகிறது. வாரந்தோறும் 2 நாட்கள் விடுமுறை எடுக்கும் நாயகன் விஜய் சேதுபதிக்கு ஒரு நியாயம், தீபாவளிக்கு கூட விடுமுறை தராமல் படப்பிடிப்பு குழுவுக்கு ஒரு நியாயமா என்ற சர்ச்சை இப்போது எழுந்துள்ளது.





