லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் “லியோ” திரைப்படம் தற்போது மும்முரமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் போன்ற பலரும் நடித்துள்ளனர். இவ்வாறு ஒரு நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆன நிலையில் “லியோ” திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதே போல் “லியோ” திரைப்படம் LCUக்குள் வருமா? வராதா? என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு தீர்ந்த பாடில்லை. எனினும் இத்திரைப்படம் LCUக்குள் வந்தால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும் என்பதிகல் சந்தேகம் இல்லை.
“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்க்கவுள்ளார். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது “தளபதி 68” திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற கிட்டத்தட்ட 900 பேர் விண்ணப்பம் போட்டிருக்கிறார்களாம். இதனால் வெங்கட் பிரபு அதிர்ச்சியடைந்துள்ளாராம். இந்த செய்தியை பகிர்ந்துகொண்ட வலைப்பேச்சு குழுவினர், “விஜய்யை நேரில் பார்ப்பதற்காகவே உதவி இயக்குனராக பணியாற்ற விண்ணப்பித்தார்கள் போல” என்று கேலி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.





