- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் அவருக்கு நான் கண்டிப்பாக நன்றி சொல்லணும், வெளிப்படையாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் -...

அந்த விஷயத்தில் அவருக்கு நான் கண்டிப்பாக நன்றி சொல்லணும், வெளிப்படையாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து, மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். மெரினா என்ற படம் மூலம் அவரை இயக்குனர் பாண்டிராஜ் அறிமுகம் செய்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ரெமோ, காக்கிச்சட்டை, வேலைக்காரன், மான் கராத்தே உள்ளிட்ட பல படங்களில் நடித்து நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நாயகனாக உயர்ந்தார்.

- Advertisement -

தற்போது தீபாவளிக்கு சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படம் வெளியாகி இதுவரை 250 கோடி ரூபாய்க்கு வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 55 கோடியாக உயர்த்தியிருக்கிறார்.

விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்த சிவகார்த்திகேயனுக்கு ஆரம்ப காலத்தில் சில படங்கள் நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தின. அதில் நடிகர் தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய 2 படங்களும் மிக முக்கியமானவையாக இருந்தன. இதில் எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தனுஷ், நயன்தாரா தோன்றி அயிட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டனர்.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் நடந்த அமரன் படம் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், எதிர்நீச்சல் படத்தில் பெற்ற பூமி என்னை சுத்துதே என்ற பாடலை ரசிகர்கள் மத்தியில் பாடினார். அப்போது, இந்த பாடலுக்கு தனுஷ் சாருக்கு தான் நான் நன்றி சொல்லணும். எனக்காக மிக விரைவாக இந்த பாட்டை தனுஷ் எழுதிக் கொடுத்தார், என்று கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த தனுஷ், ஒரு கட்டத்துக்கு பிறகு அவரது அபார வளர்ச்சியை பார்த்து, பின் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் இருவரும் பகைமை உணர்வுடன் இருப்பதாகவும் கோலிவுட்டில் பேசப்படும் நிலையில், தனுஷூக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சிவகார்த்திகேயன் பேசியிருப்பது வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்களும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்