- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் இடத்தை பிடிக்க கச்சிதமாக காய் நகர்த்தும் நடிகர் சிவகார்த்திகேயன், அந்த படத்தின் 2ம் பாகத்தில்...

விஜய் இடத்தை பிடிக்க கச்சிதமாக காய் நகர்த்தும் நடிகர் சிவகார்த்திகேயன், அந்த படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கப் போவது எஸ்கே தானாம் – அதுதான் தளபதி முதலிலேயே சிம்பாலிக்கா சொல்லிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டு இருப்பவர் விஜய். ஒரு படத்தில் நடிக்க ரூ. 250 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் விஜய், இப்போது தனது 69வது படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். எச் வினோத் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது.

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சித் தலைவராக சினிமாவில் இருந்து அரசியல் பாதைக்கு மாறியுள்ளார். வருகிற 2026ம் ஆண்டில் தமிழக முதல்வராவதே தன் லட்சியம் என அரசியல் மாநாட்டில் சூளுரைத்து, திமுக தான் எனது அரசியல் எதிரி என்றும் அறிவித்து விட்டார்.

- Advertisement -

நடிகர் விஜயை பொருத்த வரை தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஒரு சாதனை நாயகனாக உச்சத்தை தொட்டவர். ஆரம்பத்தில் உருவக்கேலி செய்யப்பட்ட விஜய், பிறகு சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இப்போது அரசியலில் அவரது வருகை, ஆரவாரமான வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டால் அவரது இடத்தில் அடுத்து சிவகார்த்திகேயன்தான் கொண்டாடப்படுவார். விஜயை போலவே திறமை, நடிப்பாற்றல் மிகுந்த கலைஞன் என்று சிவகார்த்திகேயனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் வெளியான அமரன் படத்தின் அபார வெற்றியும் அவரை வேற லெவலில் உச்சத்தில் கொண்டு சென்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார். மேலும் எச் வினோத் இயக்கும் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படி, முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடித்து, தன் இமேஜை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டு, தகுதியான இயக்குனர்களை தேர்வு செய்து தன் உயரத்தை உயர்த்திக்கொண்டே எஸ்கே இருக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துப்பாக்கி. இப்போது புதிய தகவலாக துப்பாக்கி 2 படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படி அவர் இயக்கினால் சிவகார்த்திகேயன்தான், விஜய் கேரக்டரில் நடிப்பார் என்பது உறுதி என்று சொல்லப்படுகிறது. அதுதான் தி கோட் படத்திலேயே அதற்கு அறிகுறியாக சிவகார்த்திகேயன் கையில் தளபதி விஜய் துப்பாக்கியை கொடுத்துட்டாரே என ரசிகர்கள் உற்சாகமாக கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்