எப்போதுமே பேசுவதை குறைத்துக்கொண்டு கேட்பதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. அதனால்தான் வாய் ஒன்றும், காதுகள் இரண்டும் உள்ளதாகவும் சொல்வார்கள். ஆனால் தேவையின்றி பேசிப் பேசியே தன் மீதான விமர்சனங்களை அதிகரித்துக் கொள்ளும் தவறுகளை சில நேரங்களில் நடிகர்களே செய்து விடுகின்றனர்.
கங்குவா படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிகர் சூர்யா, கங்குவா படம் குறித்து ஓவர் பில்டப் கொடுத்தார். படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்றார். வாயை பிளந்துகிட்டு எல்லோரும் பார்ப்பீங்க என்றார். 2000 கோடி ரூபாய் வசூலை கங்குவா கடந்துவிடும் என்றும் கூறப்பட்டது. இப்போது சூர்யா பேசியதையே ட்ரோல் செய்து இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
முதல் நாள், முதல் ஷோ என்ற எப்டிஎப்எஸ் அடிப்படையில் வழக்கமாக யூடியூப் சேனல்கள்தான், தியேட்டர் வாசல்களில் காத்திருந்து படம் பார்த்து வரும் ரசிகர்களிடம் ரிவ்யூ கேட்பது வழக்கம். இந்தமுறை சில டிவி சேனல்களே கேமரா, மைக்குடன் தியேட்டர்கள் முன் குவிந்த நிலையில், கங்குவா படம் குறித்து ரசிகர்களின் கடுமையாக விமர்சனங்கள் பெரிய அளவில் மக்களை சென்றடைந்து விட்டது.
அதனால் எப்டிஎப்எஸ் விமர்சனம் ஏற்படுத்தி கடும் விமர்சனம் முதல் நாளிலேயே தியேட்டர்களில் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. அதனால் தமிழ்நாட்டில் கங்குவா முதல் நாள் வசூல் 8.25 கோடி ரூபாய்தான். ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 15.86 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அமரனிடம் கங்குவா தோற்றுப் போய்விட்டது.
இந்த சூழலில் இப்போது கங்குவா படத்தை இந்தியன் 2 படத்துடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதனால் இப்போது உலக மொக்கையாக பெரிய அளவில் ரசிகர்களை ஏமாற்றி, கதற வைத்தது கங்குவா படமா, இந்தியன் 2 படமா என்று கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் சூர்யா, கமல் இருவரில் யார் வெற்றியாளர் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கங்குவா படம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வந்திருந்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் படம் ஓரளவுக்காவது பிடித்து போயிருக்கும். பேசி பேசியே படத்தை பில்டப் செய்து, இந்தியன் 2 வுக்கு போட்டி கங்குவா என்ற சூழலை கங்குவா படக்குழுவினரே ஏற்படுத்தி விட்டனர். இயக்குனர் ஹீரோ ஒளிப்பதிவாளர் என யாருமே இந்த படத்தை ஒரு தடவை கூட பார்த்துவிட்டு ரிலீஸ் செய்யவில்லையா, என்றும் சந்தேகமாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





