- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு - இதெல்லாம் தேவையா...

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு – இதெல்லாம் தேவையா என ரசிகர்கள் கேள்வி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் கஸ்தூரி. 1990களில் வெளியான பல வெற்றிப் படங்களில் நடித்தார். ஆத்தா உன் கோயிலிலே, எங்க முதலாளி, ராக்காயி கோயில், உரிமை ஊஞ்சலாடுகிறது. இந்தியன், அபிராமி, அமைதிப்படை, சின்னவர் என பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அரசியல் மேடைகளில் அவ்வப்போது காணப்படுகிறார். தனது வலைதள பக்கங்களில் சர்ச்சையான விஷயங்களுக்கு அவரே தானாக முன்வந்து விமர்சனம் செய்கிறார். சமூகம் சார்ந்த அரசியல் சார்ந்த விஷயங்களிலும் கேள்வி எழுப்பி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

கடந்த 3ம் தேதி சென்னையில் நடந்த ஒரு அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சில சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை நடிகை கஸ்தூரிக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களை பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை. என் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. அதற்கான வருத்தம் தெரிவித்து, நான் பேசிய விஷயங்களை, கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் மதுரை திருநகர் போலீசில் நாயுடு மகாஜன சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் என புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் நடிகை கஸ்தூரி, தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியது.

இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் நடிகை கஸ்தூரி மனுதாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தலைமறைவான கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்