- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் முரளி மறைந்த போது அவரது டைரியில் இருந்த முக்கிய தகவல்… பிரபல தயாரிப்பாளர் சொன்ன...

நடிகர் முரளி மறைந்த போது அவரது டைரியில் இருந்த முக்கிய தகவல்… பிரபல தயாரிப்பாளர் சொன்ன அந்த வார்த்தைகள் – பதறிப் போன முரளி குடும்பத்தினர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் முரளி. குறிப்பாக கடந்த 1980 – 90களில் அவர் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ஆனால் 50 வயது நெருங்குவதற்கு முன்பே அவர் திடீரென உடல் நலக்குறைவால் மறைந்து விட்டார். அவரது மகன்கள் அதர்வா, ஆகாஷ் ஆகியோர் இப்போது படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, நடிகர் முரளி இறந்த போது நடந்த சம்பவம் குறித்து பேசியிருக்கிறார். அதுபற்றி பாலாஜி பிரபு கூறியதாவது, நடிகர் முரளி இறந்த பிறகு அவருக்கு பணம் கொடுத்த கடன்காரர்கள் பலரும் அவரது குடும்பத்தினரிடம் பணம் கேட்க ஆரம்பித்து விட்டனர். இதனால் முரளி மனைவி மற்றும் மகன்கள் அதர்வா ஆகாஷ் அதிர்ச்சியடைந்தனர்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏனெனில் யாரெல்லாமோ வந்து முரளிக்கு கடன் கொடுத்ததாக பணத்தை திருப்பி கேட்கிறார்கள். நடிகர் முரளிக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. முக்கிய விஷயங்களை எல்லாம் அவர் டைரியில் எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர்.

பிறகு அவரது குடும்பத்தினர் முரளியின் டைரியை பார்த்த போது அதில் முரளி அவர் கடன் வாங்கிய நபர்கள் குறித்தும் அதில் வாங்கிய தொகை குறித்தும் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார். அதனால் அந்த குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். ஆனால் அதில் பல பேர் கடனை திருப்பிக் கேட்ட நிலையில் ஒருவர் மட்டும் முரளி குடும்பத்தினரிடம் பணத்தை திருப்பிக் கேட்கவில்லை.

- Advertisement -

அவர்தான் வினியோகஸ்தர் தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியன். 10 லட்சம் ரூபாய் அவர் கடன் தந்திருப்பதாக முரளி டைரியில் எழுதி வைத்திருந்தார். ஆச்சரியமடைந்த முரளி குடும்பத்தினர் திருப்பூர் சுப்ரமணியத்தை போனில் அழைத்து பேசியுள்ளனர். அப்போது முரளிக்கு 10 லட்சம் பணம் கொடுத்தது உண்மைதான் என்று அவரும் கூறியிருக்கிறார். எல்லோரும் கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கின்றனர். நீங்கள் ஏன் கேட்கவில்லை என்று அவரிடம் முரளி குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

அதற்கு திருப்பூர் சுப்ரமணியன், கடன் வாங்கிய முரளி போய்விட்டார். அவரே போன பிறகு அந்த பணத்தை நான் கேட்பது சரியல்ல. அதனால் விட்டுவிட்டேன். அந்த பணத்தை எனக்கு நீங்களும் தர வேண்டாம் என்று பெருந்தன்மையாக கூறியிருக்கிறார். ஆனால் அவரை நேரில் வீட்டுக்கு வரவழைத்த முரளியின் குடும்பம், அந்த பணத்தை அவரிடம் கொடுத்து அவரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்