தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில், உயர்ந்த இடத்துக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் இந்த அளவுக்கு முன்னேற முக்கிய காரணம் மீடியா தான். விஜய் டிவியில் அது இது எது என்ற கலகலப்பான நிகழ்ச்சியை நடத்தி, முதலில் விஜய் டிவி பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.
அதைத் தொடர்ந்து, சினிமா நட்சத்திரங்களை, ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக சந்திப்பதும், அவர்களை நேர்காணல் செய்வதும் அவரது பணியாக மாறியது. ஒரு கட்டத்தில், விருது வழங்கும் விழாக்களில் இருவரின் ஒருவராக மேடையில் போர்டியம் முன் நின்று, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் செய்தார் சிவகார்த்திகேயன்.
இப்படி விஜய் டிவி என்ற மீடியா மூலம் மக்கள் பார்வைக்கு வந்த சிவகார்த்திகேயன், அடுத்து சின்னத்திரையில் இருந்து பெரிய திரையான வெள்ளித்திரைக்கு மெரினா படம் மூலம் அறிமுகமானார். இயக்குநர் பாண்டிராஜ் அவரை, தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பிறகே, சினிமாவில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள், அவரது முன்னணி கதாநாயகனாக மாற்றியது.
இந்நிலையில், அயலான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அப்போது, அந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சிவகார்த்திகேயன், இந்த படம் சிறப்பாக வரவேண்டும், ரசிகர்களை நல்ல படமாக சென்று சேர வேண்டும் என்பதற்காக சம்பளம் கூட வாங்காமல் நடித்திருப்பதாக குறிப்பிட்டார்,. இதை சமூக வலைதளங்கள் அவரது தாராள குணத்தை பாராட்டி எழுதின. சமூக வலைதளங்கள் இப்படி சிவகார்த்திகேயன் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களையே எழுதி வந்தன.
இந்நிலையில், சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் அளித்த ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயன், மன்னிக்க முடியாத, மறக்கவே முடியாத, ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு நம்பிக்கை துரோகத்தை எனக்கு செய்துவிட்டார் என்று கூறியதுதான், கடந்த 2 வாரங்களாக, சமூக வலைதளங்களில் பற்றி எரிகிறது. இதற்கு சிவகார்த்திகேயன் மறுப்போ, விளக்கமோ, பதிலோ தராமல் இன்னும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இருக்கிறார்.
இதற்கிடையே, இமான் பேசிய வீடியோ வெளியானதை அடுத்து, இமானிடம் பேசிய சிவகார்த்திகேயன் முதலில் அதை டெலீட் செய்யுமாறு கெஞ்சி இருக்கிறார். பின்னர் மிரட்டியும் இருக்கிறார். அதுமட்டுமின்றி சமூகவலைதளங்களில் இது பரவாமல் தடுக்க, லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பத்திரிகையாளர் பிஸ்மி, இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த நம்பிக்கை துரோகம், அதை சொன்னதற்காக அவரை சிவகார்த்திகேயன் மிரட்டியது அனைத்தும் ரெக்கார்டு செய்யப்பட்டு ஆதாரமாக உள்ளது என்று கூறி இருக்கிறார். அதை மீடியாவில் வெளியிட்டால், அவரது சினிமா மார்க்கெட்டே காலியாகி விடும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.





