- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென பரபரப்பை ஏற்படுத்திய நயன்தாரா - தனுஷ் வீடியோ விவகாரம், எப்படியோ எங்களை காப்பாத்தீட்டீங்க… -...

திடீரென பரபரப்பை ஏற்படுத்திய நயன்தாரா – தனுஷ் வீடியோ விவகாரம், எப்படியோ எங்களை காப்பாத்தீட்டீங்க… – மனசார நன்றி சொன்ன கங்குவா படக்குழு!

- Advertisement -

ஓவர் பில்டப்பு ஒடம்புக்கு ஆகாது தம்பி என வாய் சவடால் பேசும் சிலரை பார்த்து அருகில் இருப்பவர்கள் அட்வைஸ் சொல்வது வழக்கம். அப்படிதான் கங்குவா படம் குறித்து ஓவராக பில்டப் செய்துவிட்டு இப்போது செமத்தியா கங்குவா படக்குழு வாங்கி கொண்டிருக்கிறது. கங்குவா என பெயரை கேட்டாலே ரசிகர்கள் காதை பொத்திக் கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் முதல் நாளில் 58 கோடி ரூபாய், 2ம் நாளில் 89.32 கோடி ரூபாய் என கங்குவா படத்தின் வசூல் நிலவரத்தை கங்குவா படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் 100 கோடி ரூபாய் வசூலை கங்குவா கடந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தியேட்டர்களில் ஆளே இல்லாத நிலையில் எப்படி ரூ. 100 கோடி வரும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படங்கள் எல்லாமே தங்கை அல்லது மகள் பாசத்தை மையப்படுத்தி இருக்கும். விஸ்வாசம், அண்ணாத்த, வேதாளம் படங்கள் அப்படிதான் இருந்தது. கங்குவா படத்தில் அந்த பையனை மையப்படுத்தி அதே விஷயத்தை தான் எடுத்திருக்கிறார். கண்ணான கண்ணே என்ற பாடல் மட்டும்தான் இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.

இந்த ஆண்டில் வெளியான மிக மோசமான படம், பிளாப் ஆன படம் இந்தியன் 2 என்ற நிலையை மாற்றி விட்டீர்கள், மன உளைச்சலில் இருந்த என்னை காப்பாற்றி விட்டீர்கள் என நடிகர் கமல்ஹாசன், கங்குவா பட டைரக்டர் சிறுத்தை சிவா, நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு வாழ்த்து சொல்வது போன்ற போட்டோ மீம்ஸ் நேற்று வைரலானது.

- Advertisement -

ஆனாலும் கங்குவா படத்தின் படுதோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் படம் சிறப்பாக உள்ளது, வெளிநாட்டில் இருந்தெல்லாம் பாராட்டுகின்றனர். சூர்யா ரொம்ப ஹேப்பியாக இருக்கிறார் என்று சிறுத்தை சிவா பேசி வருகிறார். சூர்யா தரப்பில் எந்த பதிலும் இல்லை. இனி கங்குவா 2 படத்தை தயவு செய்து எடுத்து விடாதீர்கள் என்று ரசிகர்கள் சிறுத்தை சிவாவை கெஞ்சி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நயன்தாரா – தனுஷ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. திருமண வீடியோவில், நானும் ரவுடிதான் படக் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ. 10 கோடி தனுஷ் கேட்டது. நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது இணையத்தில் வைரலானது. அதுவரை கங்குவா விமர்சனங்களே இணையத்தை ஆக்கிரமித்திருந்த நிலையில், எப்படியோ எங்களை காப்பாத்தீட்டீங்க என சிறுத்தை சிவா அண்ட் டீம், நயன்தாராவுக்கு மனசார நன்றி சொல்லி இருப்பார்கள் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்