- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர் தோல்விகளை, பலத்த ஏமாற்றங்களை சந்தித்த நடிகை கௌதமி… கடைசியில் இந்த முடிவுக்கு வந்து விட்டாரா?...

தொடர் தோல்விகளை, பலத்த ஏமாற்றங்களை சந்தித்த நடிகை கௌதமி… கடைசியில் இந்த முடிவுக்கு வந்து விட்டாரா? – வருத்தப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு நாயகியாக குருசிஷ்யன் படத்தில் அறிமுகமானவர் கௌதமி. களையான முகமும், வசீகரமான அழகும் கொண்ட கௌதமி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து தேவர் மகன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள், தர்மதுரை, ராஜா கைய வெச்சா, ரிக்‌ஷா மாமா சந்தனக்காற்று, பெண்புத்தி பின்புத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

கடந்த 1980, 90களில் மிக பிஸியாக இருந்த நடிகைகளில் கெளதமியும் ஒருவர். தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்த கௌதமி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நிறைய நடித்தார். தொழில் அதிபரை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்வில் இணைந்த அவர், சுப்புலட்சுமி என்ற மகளுக்கு தாயானார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்த கௌதமி, தன் மகளுடன் தனிமையில் வாழ்ந்தார். அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கெளதமி, தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து மறுபிறவி எடுத்தார். அந்த சூழலில் நடிகர் கமல், அவரது மனைவி சரிகாவை பிரிந்த நிலையில் கௌதமியுடன் நெருக்கமானார்.

இதையடுத்து கமல், கௌதமி திருமணம் செய்துக்கொள்ளாமல் லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்தனர். பல ஆண்டுகளுக்கு பின் அந்த உறவிலும் விரிசல் ஏற்பட கமலை விட்டு கெளதமி விலகினார். பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட கௌதமி, கட்சி பிரசாரம் செய்தார். கட்சி்ககாக உழைத்தார். ஒரு கட்டத்தில் கட்சி நிர்வாகிகளே, அவரது கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை அபகரித்து மோசடி செய்த நிலையில், கட்சியை விட்டும் விலகினார்.

- Advertisement -

35 ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகையாக சினிமா துறையில் கலக்கிய கெளதமி, பல படங்களில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். திருமண வாழ்வில் பிரிவு, புற்றுநோய் பாதிப்பு, கைவிட்ட கமல்ஹாசன், ஏமாற்றி கட்சி என தொடர்ந்து வாழ்க்கையில் பல தோல்விகளை, ஏமாற்றங்களை சந்தித்தார். சினிமாவிலும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இப்போதைய சூழலில் இல்லை.

இதையடுத்து நடிகை கௌதமி டிவி சீரியல்களில் நடிக்க வந்துவிட்டார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற சீரியலில் விரைவில் கௌதமி என்ட்ரி தரப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இனி சின்னத்திரையில் கௌதமியை பார்க்கலாம் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்