தமிழ் சினிமாவில் கடந்த 1993ம் ஆண்டில் பிரபு நடித்த உழவன் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்பா. பிறகு இயக்குனர் சுந்தர் சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படம் ரம்பாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை வெற்றியை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.
பல படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின் வெளிநாட்டில் ரம்பா குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் சில படங்களில் ரம்பா நடித்து ரி என்ட்ரி தர தயாராகி உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ரம்பா கூறியதாவது, நான் சென்னையில் இருந்தவள் என்பதால் எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் பேச தெரியும். ஓரளவுக்கு தமிழ் புரியும்.
ஆனால் படப்பிடிப்பு தளத்தில் என்னை பார்த்த நடிகர் கவுண்டமணி, நான் மும்பை நடிகை என்று எங்கே இருந்து பிடிச்சீங்க இவளை. தமிழ் பேசுவாளா என்று கிண்டலாக கேட்டுக்கொண்டு இருந்தார். அப்புறம் நான் இங்கிலீஸ் டயலாக் பேசி நடித்தேன். படத்திலேயே அது இங்கிலீஸ் டயலாக் தான்.
அந்த ஷாட் முடிஞ்சதும் கவுண்டமணிகிட்ட நான் எனக்கு தமிழ் நல்லா தெரியும் சார். படத்துல வர்றதுதான் இங்கிலீஸ் டயலாக் பேசினேன் என்றதும் டேய் இது தமிழ் பொண்ணுடான்னு எல்லோரும் சிரிக்கிறாங்க. எனக்கே ஆப்பு வெச்சுட்டே பார்த்தியான்னு சிரிக்கிறாங்க.
ஊட்டியில் ஷூட்டிங் நடக்கும் போது எனக்கு பயம். யாரோ சொன்னாங்க அங்க பேய் இருக்குமுன்னு. போகாதீங்கன்னு சொன்னாங்க. சும்மா ஒரு கதை இவங்களே அப்படி சொல்றது. ஏதோ ஒரு விதத்துல எனக்கு பிரச்னை பண்றது. நான் தனியா போகும் போது திடீர்ன்னு சத்தம் போடறது, பயமுத்துறதுன்னு கலாட்டா பண்ணுவாங்க.
இப்படி எல்லாம் செய்யறதால் நான் எங்கேயும் போக மாட்டேன். அப்படியே உட்கார்ந்துட்டு இருப்பேன். அப்போ ஓய்வா இருக்கும் போது மணிவண்ணன் சார் வந்து, என்னோட வேனுக்குள்ள போ. டிரஸ் சேஞ்ச் பண்ணனும்னா போய் பண்ணிக்கங்க என்பார். அதுல அவர் எனக்கு அப்பா கேரக்டர். அதனால் அப்பா மாதிரியே நடந்துக்குவார் என்று நடிகை ரம்பா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





