இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாத ஒரு விஷயத்தை நடிகர் கஞ்சா கருப்பு செய்வது ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த கஞ்சா கருப்பு சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னைக்கு வந்தவர்.
பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் காமெடி நடிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். குறிப்பாக அவர் நடித்த சுப்ரமணியபுரம் பருத்திவீரன் தாமிரபரணி நாடோடிகள் போன்ற படங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.
பிறகு அவர் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் ஒரு சொந்தப்படம் தயாரித்து வெளியிட்டார். சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி இந்த படத்திற்காக கஞ்சா கருப்பு பயன்படுத்தி இருந்தார். ஆனால் அந்த படம் தோல்வியடைந்து பலத்த நஷ்டத்தை சந்தித்தார்.
மேலும் இந்த படத்தை தயாரித்த வகையில் அவருக்கு பெரிய அளவில் கடன்களும் ஏற்பட்டது. சொந்தமாக கட்டிய வீட்டையும் விற்று விட்டார். இந்த சூழலில்தான் கஞ்சா கருப்பு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை.
இந்நிலையில் கஞ்சா கருப்பு அவரது தனது சொந்த படத்துக்காக வாங்கிய அந்த போர்வெல் லாரியை பயன்படுத்தி தென் மாவட்ட பகுதிகளில் மக்களுக்காக எந்தவித கட்டணமும் வாங்காமல் இதுவரை 55 போர்வெல் குழாய் அமைத்து தந்து இருக்கிறார். இன்னமும் பல பேருக்கு இதே போல் உதவிகளை செய்து வருகிறார்.ஒரு போர்வெல் போட குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகுமாம்.
அந்த பகுதியில் உள்ள வறுமையான மக்கள் யார் வந்து கேட்டாலும் அவர்களுக்கு தம் சொந்த செலவில் போர்வெல் போட்டு கொடுத்து கொடுத்திருக்கிறார். அது போக அவர் பிறந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அந்த பள்ளியை கவனித்து வருவது நடிகர் கஞ்சா கருப்புவின் மனைவி சங்கீதா. இவர் ஒரு பிஸியோஃதெரபிஸ்ட். இன்று உச்சத்தில் இருக்கும் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்வது ரசிகர்களிடம் பெரிய பாராட்டை பெற்றுள்ளது.





