- Advertisement -
Homeபொழுதுபோக்குவடசென்னை இரண்டாம் பாகத்தை விட்டு தள்ளுங்க... அதுக்கு முன்னால இந்த ஒரு படமும் இருக்கு... வெற்றிமாறன...

வடசென்னை இரண்டாம் பாகத்தை விட்டு தள்ளுங்க… அதுக்கு முன்னால இந்த ஒரு படமும் இருக்கு… வெற்றிமாறன வச்சுக்கிட்டே சஸ்பென்சை சக்கையாக பிழிந்த சமுத்திரக்கனி…

- Advertisement -

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்த வெற்றிமாறன், முதல்முறையாக இயக்குனராக அறிமுகமானது பொல்லாதவன் திரைப்படத்தில் தான். வடசென்னையை மையப்படுத்தி, அதில் பைக் திருட்டு குறித்து சுவாரசியமாக கதையை கூறியிருந்தார் வெற்றிமாறன்.

 

- Advertisement -

அந்த சமயத்தில் தொடர் தோல்விகளை கொடுத்துக் கொண்டிருந்த தனுசிற்கு இந்த திரைப்படம் திருப்புமுனையை கொடுத்தது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினர். அன்று முதல் இளைஞர்களின், விருப்பமான இயக்குனராக இருந்து வருகிறார் வெற்றிமாறன்.

 

- Advertisement -

தொடர்ந்து தனுஷ் கூடவே பயணித்து வரும் அவர், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் திரைப்படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதில் ஆடுகளம் மற்றும் அசுரன் என இரண்டு திரைப்படங்களும் தேசிய விருதை பெற்றது. குறிப்பாக தனது தேர்ந்த நடிப்பிற்காக, அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருதை வாங்கினார் தனுஷ்.

 

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் இன்னொரு மைல்கல்லாக அமைந்த திரைப்படம் வடசென்னை. சாதாரண பழிக்குப் பழி கதை தான் என்றாலும், தனது நேர்த்தியான திரைக்கதையின் மூலம் பாராட்டைப் பெற்றார் வெற்றிமாறன். இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என மிகப் பெரிய பட்டாளமே நடித்திருந்தது.

 

ராஜன் கதாபாத்திரத்தில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இயக்குனர் அமீர். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், தனித்தனியாக ஒரு கதைகளை சொல்லி அதனை இறுதியில் கொண்டு வந்து முடித்திருப்பார் வெற்றிமாறன். இந்த திரைப்படம் வெளியானதில் இருந்து, அதன் இரண்டாம் பாகம் எப்போது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

இந்த நிலையில், அண்மையில் வெற்றிமாறன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் தொகுப்பாளர் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேட்க, விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும் என்று கூறினார் சமுத்திரக்கனி. அதேபோல் ராஜன் வகையறா படமும் இருப்பதாக தெரிவித்தார். வடசென்னை திரைப்படத்திற்கு முந்தைய பாகமாக அது எடுக்கப்பட்டுள்ளது. ராஜன் கதாபாத்திரத்தை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், வெளியாகும் என்று சூசகமாக கூறியிருக்கிறார் சமுத்திரக்கனி.

- Advertisement -

சற்று முன்