தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கி நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சசிக்குமார். தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்திலும் சசிக்குமார் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குட்டிப்புலி, சுந்தரபாண்டியன், கொடிவீரன், கிடாரி, அயோத்தி, பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கிறார்.
சமீபகாலமாக சசிக்குமார் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. குறிப்பாக நாடோடிகள் 2 படம் பலத்த தோல்வியை சந்தித்தது. அதே போல் கொம்பு வைத்த சிங்கம்டா படமும் வெற்றி பெறவில்லை. இதற்கிடையே சில படங்களை சொந்தமாக தயாரித்தும் கடனாளியாக மாறினார் சசிக்குமார்.
எனினும் மீண்டும் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள புதிய படங்களில் சசிக்குமார் கமிட் ஆகி நடித்து வருகிறார். சசிக்குமார் நடித்த படங்களில் சுந்தரபாண்டியன் பெரிய வெற்றியை பெற்ற படம். லட்சுமிமேனன், சூரி, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் சுந்தரபாண்டியனாக நடித்த சசிக்குமார், லட்சுமி மேனனை காதலிப்பார். ஆனால் அவரை வில்லன் கேரக்டரில் நடித்திருந்த விஜய் சேதுபதியும் காதலிப்பார். தனது அக்காவின் கணவர் தம்பியான விஜய் சேதுபதியை மறுத்துவிட்டு, லட்சுமி மேனன் சசிக்குமாரை காதலிப்பார். அதனால் ஆத்திரமடையும் விஜய் சேதுபதி, சசிக்குமாரை கொல்ல முயற்சிப்பதுதான் படத்தின் கதை.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் யாஷ். இவர் கேஜிஎப், கேஜிஎப் 2 படங்களின் மூலம் பான் இந்தியா ஸ்டார் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். 1000 கோடி ரூபாய் வசூலை கடந்த கேஜிஎப் படங்களின் நாயகனாக வெற்றி பெற்றவர். அடுத்து ராமாயணம் என்ற படத்தில் ராவணன் கேரக்டரில் யாஷ் நடிக்கிறார். இதில் சீதையாக சாய்பல்லவி நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெளியான சுந்தரபாண்டியன் படம், கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் சசிக்குமார் கேரக்டரில் கன்னடத்தில் நடித்திருப்பது கேஜிஎப் நாயகன் யாஷ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பஸ் பயண காட்சி புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சுந்தரபாண்டியன் படம், தமிழ் நடிகர் சசிக்குமாருக்கும், கன்னட நடிகர் யாஷூக்கும் இப்படி ஒரு தொடர்பு உருவாக்கி விட்டதா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.





