தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் நடிகர் விஜயை, கடந்த சில தினங்களாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் என கவட்டையை விரிச்சுகிட்டு நின்னா, லாரி வந்து அடிச்சிடும் என்று விஜயை சபிக்கும் விதமாக பேசியிருந்தார். இதற்கு முன்னாள் நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக பதில் தந்துள்ளார். ஏற்கனவே, தன்னை திருமணம் செய்வதாக பழகி ஏமாற்றியதாக சீமான் மீது கடுமையாக குற்றம் சாட்டியவர்தான் விஜயலட்சுமி.
இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சீமானை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் அதில் கூறியதாவது, என்ன மிஸ்டர் சீமான், விஜய் அண்ணாவுக்கு சாபம் எல்லாம் விடறீங்க, ரோட்டுல அந்த பக்கம் இரு, இல்லேன்னா இந்த பக்கம் இரு, நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துடுவேன்னு சாபம் எல்லாம் விடறீங்க.நீங்க ரொம்ப உத்தமனா சீமான், நான் உங்க ரூட்டுக்கே வர்றேன்.
அண்ணன் விஜய் ஆகட்டும், திமுக ஆகட்டும் கொள்கை ரீதியாகத்தானே தவறு பண்ணியிருக்காங்க. அப்படீன்னு மக்கள் சொல்லலை. நீங்க சொல்லீட்டு இருக்கறீங்க. அப்போ கொள்கை ரீதியா தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படீன்னா, எங்களை மாதிரி பெண்களை சீரழிச்சு நடுரோட்டுல விட்டீங்களே, நீங்க எது அடிச்சு சாக மாட்டீங்க மிஸ்டர் சீமான்.
முதலில் உங்க கட்சியில் இருக்கற ஓட்டை எல்லாம் போய் சரி பண்ணுங்க, போங்க. உங்க கட்சியில் நிறைய ஊழல் நடக்குதா, அடுத்ததா திருச்சி சூர்யா ஏதோ உங்க ஆபாச வீடியோவை வெளியிட்டு உங்க மானத்தை வாங்க போறாராம், அதை எல்லாம் போய் என்னான்னு பாருங்க, திமுகவுக்கு என்ன பண்ணனும்ன்னு திமுகவுக்கு தெரியும், விஜய் அண்ணாவுக்கு என்ன பண்ணனமுன்னு விஜய் அண்ணாவுக்கு தெரியும்.
இப்படி எல்லாருக்கும் அவங்கவங்க வேலை என்னான்னு தெரியும். உலகத்துல உங்களுக்கு மட்டும்தான் உங்க வேலையை பார்க்க தெரியாமல் காலையில் எந்திரிச்சா சும்மா இப்படி பப்ளிசிட்டி பண்ணிகிட்டு, அடுத்தவங்களை சபிச்சுக்கிட்டு, நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைஞ்சுகிட்டு இருக்கறீங்க.
அதனால் பெரிய உத்தமர் மாதிரியோ கண்ணகி மாதிரியோ சாபம் எல்லாம் விடாதீங்க, 24 மணி நேரமும் நான்தான் பெங்களூருல இருந்து உங்களுக்கு சாபம் கொடுத்திட்டு இருக்கிறேனே, கொள்கை ரீதியா தவறு பண்ணுனவங்களே லாரி அடிச்சு சாவாங்கன்னா, நீங்க ஒருநாள் தமிழ்நாடு மக்கள் அடிச்சுதான் சாவீங்க என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





