- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை கீர்த்தி சுரேஷூக்கு வருகிற டிசம்பர் 11ம் தேதி கோவாவில் திருமணம், மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?...

நடிகை கீர்த்தி சுரேஷூக்கு வருகிற டிசம்பர் 11ம் தேதி கோவாவில் திருமணம், மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் அவர் நடித்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. முன்னணி நடிகர்களான விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி விக்ரம் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தமிழில் மயக்கம் என்ன என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து அண்ணாத்த சர்கார் பைரவா தொடரி ரெமோ ரஜினி முருகன் சைரன்108 சாமி 2 நடிகையர் திலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றார். இதில் சில படங்கள் பெரிய வெற்றி படங்களாகவும் அமைந்தன.

- Advertisement -

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா படமும் ரசிகர்களின் கவனம் ஈர்த்த படமாக அமைந்தது. நடிகையர் திலகம் என்ற படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி தேவி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்பையும் பலத்த பாராட்டையும் பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது கீர்த்தி சுரேஷூக்கு கிடைத்தது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வதந்தியாக வெளியானது. ஆனால் தற்போது அவரது திருமணம் தகவல் அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 11ம் தேதி கோவாவில் இந்த திருமணம் உறுதியாக நடைபெறுகிறது.

- Advertisement -

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷூக்கு 32 வயது ஆகிறது. அவரது பெற்றோர் சுரேஷ் மற்றும் மேனகா திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டநாள் காதலரை தான் கரம் பிடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரது காதலரின் பெயர் ஆண்டனி தட்டில். கீர்த்தி சுரேஷ் அவரும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனி, கீர்த்தி காதல் நீடித்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் தரப்பில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொள்ளும் ஆண்டனி, சென்னையில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்