- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு; கோர்ட்டில் இருவரும் நேரில் ஆஜர்; விசாரணையில் ஏற்பட்ட...

தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு; கோர்ட்டில் இருவரும் நேரில் ஆஜர்; விசாரணையில் ஏற்பட்ட திடீர் திருப்பம் – வரும் 27ம் தேதி இறுதி தீர்ப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர். தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு 20 ஆண்டுகள் கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்த ஐஸ்வர்யா – தனுஷ், கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். சட்டபூர்வமான விவாகத்துக்கு கேட்டு இருவரும் கடந்த மார்ச் 15ம் தேதி சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

- Advertisement -

இதுவரை குடும்பநல நீதிமன்றத்தில் 3 முறை தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் 3 முறையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் இருவருமே கோர்ட்டுக்கு நேரில் ஆஜராகவில்லை. அதனால் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது மனைவி, லதா ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் பேசி மீண்டும் தனுஷூடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது. அதனால்தான் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருவரும் தவிர்க்கின்றனர். அதனால் மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது.

- Advertisement -

இந்நிலையில் இன்று சென்னை முதன்மை குடும்நல கோர்ட்டில் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. இதுவரை 3 முறை கோர்ட்டில் நேரில் ஆஜராகாத அவர்கள், இந்த முறை நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நேரில் ஆஜராகினர். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கோர்ட்டில் அவர்கள், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் இன்றி பிரிவதில் உறுதியாக இருக்கிறோம் என்று திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 27ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்து வழக்கை தள்ளி வைத்தார். இன்னும் 6 நாட்களில், வருகிற 27ம் தேதி தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கும் அவர்களது திருமண உறவை ரத்து செய்து, விவாகரத்து வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்