- Advertisement -
Homeபொழுதுபோக்குகுமரேசன் ரெடி.. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கெட்டப்பை வெளியிட்டு - அவரே பகிர்ந்த முக்கிய...

குமரேசன் ரெடி.. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கெட்டப்பை வெளியிட்டு – அவரே பகிர்ந்த முக்கிய தகவல்

- Advertisement -

மறைந்த மாபெரும் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கடந்த 2007-ஆம் ஆண்டு தனுஷ்-ஸை வைத்து “பொல்லாதவன்” என்கிற திரைப்படத்தினை இயக்கி வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடி எடுத்து வைத்தார். அதன் பிறகு அவர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், பாவ கதைகள், விடுதலை என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து கோலிவுட்டின் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவராகவும் உருவெடுத்துள்ளார்.

Viduthalai

வெற்றிமாறன் எடுக்கும் படங்களில் உள்ள நேர்த்தியும், அர்த்தமுள்ள கதைக்களமும் ரசிகர்கள் மத்தியில் அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியது. அதோடு அவரது படங்கள் ஒவ்வொன்றும் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி படங்களாக மாறி வருகின்றன. அந்த வரிசையில் வெற்றிமாறன் கடைசியாக இயக்கிய விடுதலை படத்தின் முதலாவது பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த விடுதலை படத்தின் மூலம் நகைச்சுவை நடிகரான சூரி முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதோடு இந்த படத்தில் விஜய் சேதுபதி, சேத்தன், கௌதம் மேனன் என பலரும் நடிப்பில் மிரட்டி இருந்தனர். கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விடுதலை படமானது சூரியக்கு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.

- Advertisement -

எழுத்தாளர் ஜெயமோகனின் “துணைவன்” என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். அதோடு இந்த படத்தைப் பார்த்த ரஜினி உட்பட பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என ஏற்கனவே வெற்றிமாறன் அறிவித்திருந்த வேளையில் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றினை நடிகர் சூரி தனது சமூக வலைதள பக்கம் மூலமாக பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் சூரி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் : “குமரேசன் ரெடி” என்கிற பெயரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் : அவர் குமரேசன் கெட்டப்பிற்காக தயாராகும் படி இருக்கிறது. அதோடு “விடுதலைப் பார்ட் 2” என குறிப்பிட்டு விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் தற்போது நடைபெறுகிறது என்கிற முக்கிய தகவலையும் அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்