நடிகர் விஜய் ஆரம்பத்தில் நடித்த சில படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அறிமுகமான விஜய் செந்தூரப்பாண்டி படத்தில் கேப்டன் விஜயகாந்துக்கு தம்பியாக நடித்தார். தொடர்ந்து ரசிகன் தேவா படங்களில் நடித்த நிலையில் விஜய்க்கு ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் கவனம் கொடுக்கவில்லை.
ஆனால் இயக்குனர் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படத்திற்கு பிறகு விஜயின் இமேஜ் வேற லெவலுக்கு சென்று விட்டது. ரசிகர்கள் விஜய் விஜய் என்று கொண்டாட ஆரம்பித்து விட்டனர். விஜயின் சினிமா பயணம் அந்த படத்தில் இருந்துதான் வெற்றிப் பாதையில் தொடர ஆரம்பித்தது என்றால் அது மிகையல்ல.
பூவே உனக்காக படம் குறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, நான் ஆரம்பத்தில் இருந்தே படங்களுக்கு நிறைய டைட்டில்களை தனியாக ஒரு நோட்டில் எழுதி வைத்து விடுவேன். 150க்கும் மேற்பட்ட டைட்டில்களை எழுதி வைத்திருக்கிறேன். இப்போதும் தோன்றினால் உடனே எழுதி வைத்துவிடுவேன்.
இதில் பெரும்பாலும் பாடல்களில் வரும் முதல் வரியாக தான் இருக்கும். கம்ப்யூட்டரில் டைட்டில் என தனியாக ஒரு போல்டர் போட்டும் நிறைய டைட்டில்களை வைத்திருக்கிறேன். என்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன்.
விஜய் சங்கீதா நடித்த பூவே உனக்காக படத்துக்கு முதலில் நான் வைத்த பெயர் நீ வருவாய் என என்றுதான் டைட்டில் வைத்தேன். ஆனால் ராஜகுமாரன்தான் இந்த டைட்டில் சுமாராக இருக்கிறது என்று சொன்னார். பிறகு பூவே உனக்காக என்று மாற்றி வைத்தேன். ஆனால் ராஜகுமாரன் அவர் இயக்கிய முதல் படத்துக்கு நீ வருவாய் என பெயர் வைத்து விட்டார், என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
இயக்குனர் ராஜகுமாரன் நடிகை தேவயானியை காதல் மணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்கிய முதல் படத்தில் பார்த்திபன் தேவயானி ஆகியோர் பிரதான கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் தேவயானிக்கு ஜோடியாக அஜீத்குமார் நடித்திருந்தார். இயக்குனர் விக்ரமன் விஜய் படத்துக்கு வைத்த டைட்டிலை காப்பியடித்து அஜீத்குமார் படத்துக்கு ராஜகுமாரன் வைத்து விட்டாரே இது நியாயமா என தளபதி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





