நடிகர் விஜய் நடிப்பில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வருகிற 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கி உள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தி கோட் படம் மொத்தம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சம்பளம் பாதி என படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி அர்ச்சனா உறுதிபடுத்தி உள்ளார். இவரது இலக்கு படத்தின் வசூல் ரூ. 1000 கோடியை கடக்க வேண்டும் என்பதுதான். லியோ படத்தின் வசூல் சாதனையை தி கோட் முறியடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
வருகிற 5ம் தேதி தி கோட் படம், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மொத்தம் 1000 திரைகளில் தமிழ்நாட்டிலும், உலகம் முழுவதும் 6000 திரைகளிலும் தி கோட், வருகிற 5ம் தேதி முதல் காட்சியாக திரையிடப்படுகிறது. இது ரசிகர்களை பெரிய அளவில் சந்தோஷப்படுத்தி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் 68வது படம் என்ற நிலையில், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க விஜய் முடிவு செய்துள்ளார். அந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ளார். இந்த படம் அரசியல் படமாக இருக்காது, அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் பொதுவான கமர்ஷியல் படமாகவே இருக்கும் என்றும் எச் வினோத் கூறியிருக்கிறார்.
அதனால் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரசியல்வாதியாக விஜய் மாறிய பின்பு நடித்து வெளிவரும் படம் தி கோட் என்றாலும், இந்த படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளோ, வசனங்களோ இல்லை என்று ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சில தினங்களாக தி கோட் படத்தின் ப்ரீ புக்கிங் ஆன்லைனில் நடந்து வருகிறது. இதில் 3 நாட்களில் இதுவரை ரூ. 25 கோடி வரை டிக்கெட் கட்டணம் வசூலித்திருபப்தாக தெரிய வந்துள்ளது. இன்னும் 3 நாட்கள் இருப்பதால் ப்ரீ புக்கிங் வசூலில் தி கோட் படம் ரூ. 100 கோடியை வசூலித்து பெரிய சாதனையை நிகழ்த்தி விடும் என்ற எதிர்பார்ப்பில் தி கோட் படக்குழுவினரும், தளபதி ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.





