நாம் தமிழர் கட்சி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் களத்தில் பரபரப்பாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் திமுக அதிமுக பாஜக கட்சிகளை கடுமையாக விமர்சித்து வந்த சீமான், சமீபகாலமாக நடிகர் விஜயை பற்றி தாறுமாறாக பேசி வருகிறார். அவரது கட்சி கொள்கைகள் குறித்தும் கிண்டலடிக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம், கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருந்து தேர்தல் பணி செய்து, கட்சிக்காக பாடுபட்டு எந்த பயனும் இல்லாத நிலையில், தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகளை மட்டுமே பெற்று வரும் நிலையில், நாமத கட்சியினர் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களில் பலர் விஜய் கட்சிக்கு தாவி வருகின்றனர்.
ஏனெனில் நடிகர் விஜய்க்கு சமீபத்தில் நடந்த அரசியல் மாநாட்டில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும், அவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பும், நாம் தமிழர் கட்சியினரை யோசிக்க வைத்திருக்கிறது. அதனால் பலரும் தவெக கட்சிக்கு மாறி வருவதால், விஜய் மீது பயங்கர கடுப்பில் சீமான் இருந்து வருகிறார்.
இந்த சூழலில் இன்று நடிகர் ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், நடிகர் மற்று் இயக்குனர் சீமான் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். சீமான் பிறந்த நாளன்று ரஜினியை நேரில் சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அப்போது ரஜினி கூலி பட ஷூட்டிங்கில் இருந்ததால் இன்று சீமான் சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் பாய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன், வர மாட்டேன் என்று நேரடியாக பதில் சொல்லாமல் வந்தாலும் வருவேன், வராமலும் போவேன் என்று ரசிகர்களுக்கு போக்கு காட்டி ஏமாற்றிய ரஜினி, கடைசி வரை அரசியல் பக்கமே எட்டி பார்க்காமல் ஒதுங்கி விட்டார். அவரது ரசிகர்கள்தான் ஏமாந்து போய்விட்டனர்.
அதனால் நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதித்துள்ள இந்த நேரத்தில், அவரை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் அரசியல் வெற்றி, நாளை ரஜினியை இன்னும் கடுமையாக விமர்சிக்க வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், அதுபற்றி சீமான், ரஜினிகாந்த் பேசியிருப்பார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





