நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நேற்று 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்த விழாவை நேற்று தமிழ்நாடு முழுவதும் தவெக கட்சி நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சென்னையில் நடந்த கட்சி 3ம் ஆண்டு துவக்க விழாவில் கட்சியின் தலைவர் நடிகர் விஜயும் பங்கேற்றார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் திமுக குறித்து சொன்ன ஒரு குறள் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமின்றி பாஜக அதிமுக குறித்தும் இந்த விழாவில் கடுமையான விமர்சனங்களை நடிகர் விஜய் முன்வைத்திருந்தார். இதுவும் அக்கட்சியினர் மத்தியில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற சட்டசபை தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் ஒரு சூழல்தான் இன்று வரை நீடித்து வருகிறது. எந்த முக்கிய கட்சிகளும் இன்னும் தவெக உடன் கூட்டணி சேர்வதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் தவெக வருகிற சட்டசபை தேர்தலை தனித்து சந்திக்கும் ஒரு நிலையே ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாடகர் வேல்முருகன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா மசசான் பாடுங்கடா என்ற பாடலையும் கொம்பன் படத்தில் அடி சிவப்பு நிறத்தழகி பாடலையும் பாடியவர் வேல்முருகன்தான்.
இதுபோன்ற ஜனரஞ்சகமான கிராமிய பாடல்களின் மூலம் சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் வேல்முருகன். நேற்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3ம் ஆண்டு துவக்க விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்றபாடகர் வேல்முருகன் மேடையில் பாடல்களை பாடினார். அப்போது முருக பக்தர்களிடம் மிகவும் பிரபலமான முருகப்பெருமான் குறித்த ஒரு பக்தி பாடலையும் அவர் மேடையில் பாடினார்.
மேடைக்கு முன்புறம் இருந்த நடிகர் விஜயை பாராட்டும் விதமாக இடையிடையே அந்த பாடலை மாற்றிப் பாடினார். இதனால் உற்சாகமான விஜய் மேடைக்கு வந்து அவரது பாடலுக்கு நடனமும் ஆடினார். இந்நிலையில் முருக பெருமானை அவமதித்ததாக பாடகர் வேல்முருகன் மீது நெல்லையைச் சேர்ந்த குற்றால நாதன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.





