தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. அவரது மூத்த மகன், செல்வராகவன். இளைய மகன் தனுஷ். செல்வராகவன் துவக்கத்தில் படங்களில் இயக்கினார். இப்போது நடிகராகி விட்டார். தனுஷ் துவக்கத்தில் நடித்துக்கொண்டிருந்த அவர் இப்போது அவரும் இயக்குனராக மாறி விட்டார்.
தனுஷ் இயக்கத்தில் அவரே நடித்த படம் ராயன். இது தனுஷின் 50வது படம். இந்த படத்தில் செல்வராகவனும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. முன்னதாக ப பாண்டி என்ற படத்தை தனுஷ் இயக்கியிருந்தார். ராயன் படத்துக்கு பிறகு தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.
காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவர் செல்வராகவன். முதல் படத்திலேயே தனது தம்பி தனுஷை கதாநாயகனாக நடிக்க வைத்திருந்தார். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் உலகம் நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
பீஸ்ட், பகாசுரன், மார்க் ஆண்டனி, ராயன் என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் செல்வராகவன் அடுத்து ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சொர்க்கவாசல் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அந்த படம் வருகிற 29ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குனராக மட்டுமின்றி, நடிகராகவும் செல்வராகவன் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் செல்வராகவன், தனது தம்பி மற்றும் நடிகர் தனுஷ் குறித்து கூறியதாவது தனுஷின் கடுமையான உலகைப் பார்த்து எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது என தூங்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார் எனக்கு பொறாமையாக உள்ளது நாமும் இப்படி இருந்திருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குனராக அவர் கூறுவதை நாம் அப்படியே செய்ய வேண்டும் என இல்லை. ஆனால் அதைக் கெடுக்காமல் செய்தால் போதுமானது. அவருக்கு என்ன வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார் என்று செல்வராகவன் வெளிப்படையாக கூறியிருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது மிகவும் கஷ்டம் என பலமுறை மேடைகளில் நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





