- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு இயக்குனர் இன்னொரு இயக்குனரை பார்த்து கேட்கிற கேள்வியா இது? அதுவும் 20 முறை திரும்ப...

ஒரு இயக்குனர் இன்னொரு இயக்குனரை பார்த்து கேட்கிற கேள்வியா இது? அதுவும் 20 முறை திரும்ப திரும்ப கேட்டிருக்கிறாரே? – சொர்க்கவாசல் படம் குறித்து ஓப்பனாக பேசிய இயக்குனர் செல்வராகவன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். ஆனால் வழக்கமான மசாலா படங்களை தரும் கமர்ஷியல் இயக்குனராக இல்லாமல், தனது படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆளுமை மிக்க ஒரு படைப்பாளியாக பார்க்கப்படுகிறார்.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் மயக்கம் என்ன இரண்டாம் உலகம் நானே வருவேன் போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன், சமீபகாலமாக படங்களிலும் நடித்து வருகிறார். பீஸ்ட் பகாசுரன் மார்க் ஆண்டனி ராயன் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இப்போது ஆர்ஜே பாலாஜி நடிப்பில் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் செல்வராகவன் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 29ம் தேதி ரிலீஸாகிறது. சென்னையில் இருந்த ஒரு சிறைச்சாலையில் வார்டன்களும், சிறைக்கைதிகளும் இடையில் நடந்த உண்மை வன்முறை சம்பவங்களை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

சொர்க்கவாசல் படம் குறித்த பிரமோசன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து படத்தின் நாயகன் ஆர்ஜே பாலாஜி பங்கேற்று வருகிறார். சில நிகழ்ச்சிகளில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இயக்குனர் செல்வராகவனும் பங்கேற்று, அந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

- Advertisement -

சொர்க்கவாசல் படம் குறித்து செல்வராகவன் கூறியதாவது, சொர்க்கவாசல் படத்தின் முழு கதையை ஆரம்பத்திலேயே எனக்கு கொடுத்து விட்டார்கள். நான் அதை படித்துப் பார்த்துவிட்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். இதுகுறித்து 20 முறையாவது படத்தின் இயக்குனரிடம், நீங்கள் தான் இதை எழுதினீர்களா என்று கேட்டிருப்பேன். ஏனென்றால் இது போன்ற ஒரு கதையை எழுதுவது ரொம்ப கஷ்டம்.

எனக்கு பொறாமையாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு படத்தை என்னால் எடுக்க முடியவில்லையே என்று பொறாமைப்படுகிறேன். ஜெயிலில் நடப்பது போன்று நிறைய படங்கள் வந்திருக்கிறது. ஆனால் இந்த படம் எனக்கு பிரமிப்பாக உள்ளது. சொர்க்கவாசல் படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்று செல்வராகவன் கூறியிருக்கிறார். பல வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் செல்வராகவனே, மற்றொரு இயக்குனரை பார்த்து உண்மையிலேயே நீங்கள் எழுதிய கதைதானா என்று சந்தேகமாக பலமுறை கேட்டதாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்