- Advertisement -
Homeபொழுதுபோக்குபாரதிராஜாவிடம் போகச் சொன்னதே நான்தான்.. ஆனால் எனக்கு அவர் செய்த துரோகம் மறக்க முடியாதது -...

பாரதிராஜாவிடம் போகச் சொன்னதே நான்தான்.. ஆனால் எனக்கு அவர் செய்த துரோகம் மறக்க முடியாதது – கே பாக்யராஜ் குறித்து பேசிய இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக ஆர் சுந்தர்ராஜன் ஒரு தனி முத்திரை பதித்தவர். அவர் இயக்கிய பல படங்கள் வெள்ளி விழா படங்களாக இருந்தன. வைதேகி காத்திருந்தாள் மெல்ல திறந்தது கதவு அம்மன் கோவில் கிழக்காலே என் ஜீவன் பாடுது ராஜாதி ராஜா போன்ற பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாகும்.

திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்ட நடிகர் ஆர் சுந்தர்ராஜன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, நானும் பாக்யராஜூம் கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர்கள். அவன் பாரதிபுரம் பகுதியில் இருந்து வருவான். 1ம் வகுப்பு முதல் ஒன்றாக படித்தவர்கள். 70 ஆண்டு காலமாக என்னை அவனுக்கு தெரியும். அவனை எனக்கு தெரியும்.

- Advertisement -

நானும் பாக்யராஜூம் ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடி சென்னையில் ஒன்றாக தான் அலைந்தோம். அந்த நேரத்தில்தான் பாரதிராஜா வந்தார். அவருக்கு ஒரு உதவி இயக்குனர் தேவைப்படுவதாக சொன்னாங்க. உடனே நான் பாக்யராஜ் போகட்டும் என்று சொல்லிட்டேன். பாக்யராஜூக்கு அப்போதே கொஞ்சம் இங்கிலீஷ் நன்றாக தெரியும்.அதனால் அவர் அந்த வேலைக்கு அவர்தான் சரியாக இருப்பார் என்று நான் நினைத்தேன்.

அப்போதெல்லாம் நான் போகலே போகலே என்று சொல்லிக் கொண்டிருந்தவன் அடுத்த நாள் காலையில் நான் எழுந்து பார்த்தபோது அறையில் இல்லை. என்னிடம் சொல்லாமல் கூட அவன் போய் விட்டான். அது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. சில ஆண்டுகள் கழித்து பாக்யராஜ் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். நீ ஊருக்கு போ. நான் படம் ஆரம்பித்த பிறகு சென்னைக்கு கூப்பிடுகிறேன் என்று எழுதியிருந்தான்.

- Advertisement -

நான் அதற்கு பதிலாக ஒரு இன்லாண்ட் லெட்டரில் நடுப்பக்கத்தில் நன்றி என்று மட்டும் எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன். நானும் அவரும் பல நாட்கள் பட்டினியாக அலைந்த மவுண்ட் ரோட்டில் ஒரு நாள் பென்ஸ் காரில் பாக்யராஜ் வந்தான். நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். காரில் யார் என்று பார்த்தால் பாக்யராஜ். என்னை தேனாம்பேட்டையில் இறக்கி விட்டு விடு என்று சொன்னேன். அதெல்லாம் முடியாது என்றான்.

பக்கத்தில் கிடந்த கல்லை எடுத்து அடிக்க போனேன். நானும் அவனும் வயிற்று பசியோடு அலைந்த மவுண்ட் ரோட்டில் என் கண் முன்னால் பென்ஸ் காரில் போய்க் கொண்டிருக்கிறான். அது அவனுடைய வளர்ச்சி தான். ஆனால் நாம நம்பிக்கை துரோகம் பண்ண கூடாது. நம்பியவர்களை ஏமாற்றக்கூடாது. அதுதான் எனக்கு பெரிய வருத்தம் என்று ஆர் சுந்தர்ராஜன் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்