- Advertisement -
Homeபொழுதுபோக்குஓடிடி தளத்தில் வெளியான தீபாவளி ரிலீஸ் படங்கள்; தியேட்டர்களுக்கு வராத ரசிகர்கள் இப்போதாவது படம் பார்ப்பார்களா?...

ஓடிடி தளத்தில் வெளியான தீபாவளி ரிலீஸ் படங்கள்; தியேட்டர்களுக்கு வராத ரசிகர்கள் இப்போதாவது படம் பார்ப்பார்களா? – ஆனா அமரன் ரிலீஸ் எப்போ?

- Advertisement -

கடந்த தீபாவளியன்று சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடி பெக்கர் மற்றும் வெங்கி அட்லூரி இயக்கிய தெலுங்கு படம், தமிழ் டப்பிங்கில் லக்கி பாஸ்கர் என 4 படங்கள் வெளியானது. இதில் அமரன் படம் மிகப்பெரிய வரவேற்புடன் இன்றும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதில் மிகவும் மோசமான ஏமாற்றத்தை தந்த படங்களாக இருந்தது கவின் நடித்த பிளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவி நடித்த பிரதர் ஆகிய 2 படங்களும்தான். இரண்டே நாட்களில் இந்த படங்களுக்கான எதிர் விமர்சனத்தால் தியேட்டர் பக்கம் ரசிகர்ளே வராமல் தவிர்த்து விட்டனர். பல இடங்களில் பிரதர், பிளடி பெக்கர் படங்களை உடனே எடுத்துவிட்டு அமரன், லக்கி பாஸ்கர் படங்களை திரையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குறிப்பாக எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான பிரதர் படம் நிச்சயமாக வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஒரு கல் ஒரு கண்ணாடி பாஸ் என்கிற பாஸ்கரன் சிவா மனசுல சக்தி போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்த இயக்குனர் என்பதால் பிரதர் படமும் பேசுகிற வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், படம் பிளாப் ஆனது.

அதே போல் வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின் நடித்த பிளடி பெக்கர் படத்தை, ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் நண்பர், உதவி இயக்குனர் சிவபாலன் இயக்கியிருந்தார். இந்த படத்தை தயாரித்ததும் நெல்சன்தான். ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தீபாவளி ரிலீஸ் படங்கள், ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளன. இதில் தியேட்டர்களில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி நடித்த வெற்றிப் படம் லக்கி பாஸ்கர், இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதே போல் பிளடி பெக்கர் படம் அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.

அதே போல் நடிகர் ஜெயம் ரவி நடித்த பிரதர் படம் நாளை, 29ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம், அடுத்த மாதம் 5ம் தேதி அல்லது 11ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்லது அதற்கு முன்னதாக ஏதாவது ஒரு தேதியில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்