- Advertisement -
Homeபொழுதுபோக்குதிறப்பு விழாவுக்கு தயாரான தென்னிந்திய நடிகர் சங்கம், திறக்கப் போவது யார்? 3 பேரில் யாருக்கு...

திறப்பு விழாவுக்கு தயாரான தென்னிந்திய நடிகர் சங்கம், திறக்கப் போவது யார்? 3 பேரில் யாருக்கு வாய்ப்பு – ஆவலாக காத்திருக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

சென்னையை தலைமையாக கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். இந்த சங்கத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் மற்றும் விஜயகாந்த் சரத்குமார் ராதாரவி என பலர் நிர்வகித்து கட்டமைத்து சங்க வளர்ச்சிக்கு பல விதங்களில் உதவினர்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு தி நகரில் புதிய கட்டுமான பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஏறக்குறைய 10 ஆண்டுகள் வரை இந்த கட்டுமான பணிகள் நீடித்த நிலையில் இடையே பல இடையூறுகள் தடைகளும் ஏற்பட்டன. நிதி சிக்கல்களும் உருவாகின.

- Advertisement -

எனினும் நடிகர் சங்க தலைவர் நாசர் பொதுச் செயலாளர் விஷால் பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்நின்று இந்த கட்டுமான பணிகளை சிறப்பாக செய்து முடித்திருக்கின்றனர். இதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் சூர்யா தனுஷ் உதயநிதி போன்றவர்கள் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து கட்டுமான பணிகளுக்கு உதவினர்.

இதில் சங்கத்தில் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் புதிய நடிகர் சங்கம் கட்டிடம் திறந்த பிறகு அந்த மண்டபத்தில் தான் எனது திருமணமே நடக்கும் என்று உறுதியாக கூறியிருந்தாா். இப்போது அவரது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா என்பது உறுதியான நிலையில் அவர்களது திருமணம் அங்குதான் நடைபெற உள்ளது.

- Advertisement -

இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மிக விரைவில் திறப்பு விழா மிக பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. ஆனால் இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறக்கப் போவது யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக கோலிவுட் வட்டாரத்தில் இப்போது பேசப்பட்டு வருகிறது.

இப்போது சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகிற மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. அதனால் மீண்டும் முதல்வராக ஸ்டாலின் நீடிப்பாரா, அல்லது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவாரா, அல்லது தவெக தலைவர் விஜய் முதல்வரா என்பதில் பலத்த குழப்பம் நீடிக்கிறது. அதனால் ஸ்டாலின் எட்பபாடி பழனிசாமி விஜய் இந்த 3 பேரில் யார் சங்கத்தின் புதிய கட்டிடத்தை திறக்கப் போகிறார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்