- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படியே போனா நிலமை என்னாவது? இயக்குனர் மணிரத்னத்துக்காக களம் இறங்கிய பிரபல நடிகை - ...

இப்படியே போனா நிலமை என்னாவது? இயக்குனர் மணிரத்னத்துக்காக களம் இறங்கிய பிரபல நடிகை – வேற லெவலில் சம்பவம் செய்திருக்கிறாரே?

- Advertisement -

இயக்குனர் மணிரத்தினம் இப்போது தக்லைப் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, சித்தார்த், திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட் ஆகி இருந்தனர்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து மலையாள நடிகர் துல்கர் சல்மான் விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவியும் விலகினார். சில தினங்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த்தும் இந்த படத்தை விட்டு விலகினார் என்ற தகவல் வெளியானது.இப்படி பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்திலிருந்து இளம் நடிகர்கள் வெளியேறியது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான், ஜெயம் ரவி, சித்தார்த் ஆகியோர் வெளியேற முக்கிய காரணமே இயக்குனர் மணிரத்னத்தின் அலட்சியப் போக்குதான் என்று தெரிய வந்துள்ளது. அதாவது ஒருமுறை துல்கர் சல்மான், மணிரத்னத்தை பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றபோது, மேலே மாடியில் இருந்து கொண்டு மணிரத்னம் உதவி இயக்குனரிடம், என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு அனுப்பி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் டென்ஷனான துல்கர் சல்மான், அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

அடுத்து ஜெயம் ரவி, தக்லைப் படத்தில் நடிக்க கமிட் ஆன நிலையில், இரண்டு முறை 30 நாட்கள், 30 நாட்கள் என கால்ஷீட் வாங்கி விட்டு, அந்த நாட்களை பிறகு வேண்டாம் என்று படக்குழு தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி தனது இரண்டு மாதங்களை விரயம் செய்தது, பெருத்த அவமானமாக இருந்ததால் ஜெயம் ரவி படத்தில் இருந்து விலகிவிட்டார். அது மட்டுமின்றி, துல்கர் சல்மான் கேரக்டரில் சிலம்பரசன் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆனதும் ஜெயம் ரவிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, நடிகர் சித்தார்த்தும், இந்த படத்தில் இருந்து விலகினார். சித்தா படத்தை தொடர்ந்து, சித்தார்த் 3 படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ஒரு படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. துல்கர் சல்மான், ஜெயம் ரவி, சித்தார்த் என மூன்று நடிகர்களுமே தக்லைப் படத்தை விட்டு விலக முக்கிய காரணம், மணிரத்னம் அவர்களிடம் காட்டிய அலட்சியப் போக்குதான். அவர்களிடம் அலட்சியமாக நடந்து கொண்டதும், கால்ஷீட் தேதிகளை முடிவு செய்யாததும், படத்தில் இந்த நடிகர்களின் கேரக்டர் குறித்தும் தெளிவாக விளக்காததும் தான்.

இப்போது தன் கணவருக்கு இதனால் கெட்ட பெயர் ஏற்படுமே என்ற சூழலில். இயக்குனர் மணிரத்தினம் மனைவி, பிரபல நடிகை சுஹாசினி, களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்து வருகிறார். நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, சித்தார்த் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி, மீண்டும் தக்லைப் படத்தில் அவர்களை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்