- Advertisement -
Homeபொழுதுபோக்கு10 ஆண்டுகளில் தொடர்ந்து 10 பிளாப் படங்களை தந்த தயாரிப்பு நிறுவனம், பழையபடி சில்வர் ஜூப்ளி...

10 ஆண்டுகளில் தொடர்ந்து 10 பிளாப் படங்களை தந்த தயாரிப்பு நிறுவனம், பழையபடி சில்வர் ஜூப்ளி படங்களை தர மீண்டு வருமா? – ஆனா இதுக்கும் சூர்யாவுக்கும் சம்பந்தம் இல்லீங்க பாஸ்!

- Advertisement -

ஒரு திரைப்படம் உருவாகி திரைக்கு வருவதில் பலரது ஒத்துழைப்பும், உழைப்பும் இருந்தாலும் மிக முக்கியமாக முதுகெலும்பாய் ஒரு படத்துக்கு இருப்பது தயாரிப்பு நிறுவனம்தான். சில கோடிகள் முதல் பல நூறு கோடி ரூபாய் வரை முதலீடு செய்து ஒரு படம் வெளிவர ஆணிவேராக இருப்பது தயாரிப்பு நிறுவனங்கள்தான். ஒரு படத்துக்கு உயிர் மூச்சாய் இருப்பது தயாரிப்பாளர்தான் என்றால் அது மிகையல்ல.

தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து, அதில் லாபமடைந்தால் மட்டுமே அடுத்தடுத்து ஒரு தயாரிப்பு நிறுவனம் படங்களை தயாரிக்க முடியும். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் பிளாப் படங்களாக தயாரித்தால், பலத்த நஷ்டத்தில் தயாரிப்பு நிறுவனத்தையே இழுத்து மூட நேரிடும். அப்படி பல தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளில் காணாமல் போயிருக்கின்றன.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெள்ளி விழா படங்களை தந்த நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். கடந்த 1980, 90களில் இந்த நிறுவனம் தயாரித்த பல படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்து வெள்ளிவிழா கொண்டாடியிருக்கின்றன. மூன்றாம் பிறை, பகல் நிலவு, கிழக்குவாசல், ஆனஸ்ட் ராஜ் என பல படங்களை சொல்லலாம். அதே நேரத்தில் குடும்பத்துடன் பார்க்கும்படியாக தரமான படங்களை மட்டுமே இந்த நிறுவனம் தயாரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிறுவனம் தயாரித்த 11 படங்களில் 10 படங்கள் பலத்த தோல்வியை சந்தித்துள்ளன. பாணா காத்தாடி படத்துக்கு பிறகு கேப்டன் மில்லர் வரை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த 10 படங்களும் பலத்த தோல்வியை சந்தித்துள்ளன. இதில் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் என்ற ஒரு படம் மட்டுமே, வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளில் 10 படங்கள் தோல்வியை தந்த நடிகர் சூர்யா நடித்த படங்களாக அவை இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத வாய்ப்புள்ளது. அவர்கள் அப்படி தவறாக சந்தேகப்பட தேவையில்லை. சூர்யாவுக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த தோல்வி படங்களுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. ஆனால் அவரது படங்கள் போலவே, 10 ஆண்டுகளில் இந்த நிறுவனம் தயாரித்த 10 படங்களும் படுதோல்வி அடைந்துள்ளன.

ஆரம்பத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் படங்கள் தயாரிப்பு விவகாரங்களை அதன் தயாரிப்பாளர் தியாகராஜன் கவனித்து, கதை விவாதங்களில் கலந்துக்கொண்டு தரமான கதையுள்ள படங்களை தேர்வு செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக தயாரிப்பாளர் தியாகராஜன் மகன் அர்ஜூன் என்பவர் கவனித்து வருகிறார். கதை விவாதங்களில் கலந்துக்கொள்ளும் அவர் கதையில் பல மாற்றங்கள், திருத்தங்கள் செய்வது, சொதப்புவது போன்ற காரணங்களால் இப்படி நடந்து வருவதாக, மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்