- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த தைரியம் எல்லா பெண்களுக்கும் வர வேண்டும் - பஸ்சில் நடந்த சம்பவம் குறித்து பேசிய...

இந்த தைரியம் எல்லா பெண்களுக்கும் வர வேண்டும் – பஸ்சில் நடந்த சம்பவம் குறித்து பேசிய நடிகை ரேவதி!

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் வேலை செய்யும் பணியிடங்கள், குடும்பங்களில் மட்டுமின்றி பொது இடங்களிலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பஸ்சில் ரயிலில் கூட்டமான இடங்களில் பெண்கள் இருக்கும் போது பாலியல் ரீதியான சீண்டல்களை சந்திக்கின்றனர்.

வீடுகளில் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக இருக்கும் பெண்களும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். ஆனால் இதில் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்தில் பயம் தயக்கம் காரணமாக தங்களது எதிர்ப்பை காட்டாமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.

- Advertisement -

அதுவே விவகாரம் செய்யும் பல ஆண்களுக்கு அந்த தவறை திரும்ப திரும்ப செய்யும் ஒரு தைரியத்தை தந்து விடுகிறது. எந்த இடத்திலும் இதுபோன்ற பாலியல் சீண்டல்களை சந்திக்கும் போது பெண்கள் எதிர்ப்பு குரல் தெரிவிக்க வேண்டும். அதனால்தான் குட் டச் பேட் டச் குறித்து வளரும் இளம் பெண்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சமீபத்தில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த சீனியர் நடிகை ரேவதி ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இவர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் பிரபு கார்த்திக் அர்ஜூன் முரளி சத்யராஜ் என பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ரேவதி இதுகுறித்து கூறியதாவது, நான் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பஸ்சில் சென்றேன். அப்போது என்னை ஒருவன் தவறாக தொட்டான். நான் அப்போது யாருக்கும் பயப்படவில்லை. அந்த இடத்திலேயே அவனை பளார் என அடித்தேன்.

அங்கிருந்த அனைவரும் அப்போது எனக்கு துணையாக இருந்தார்கள்.அந்த தைரியத்தை எனக்கு கொடுத்தது என் அம்மாதான். யாராவது தவறாக நடந்து கொண்டால் பயப்படாமல் தைரியமாக அடி என்று சொன்னார். அதைத்தான் நான் அன்று செய்தேன். இதுபோல ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று நடிகை ரேவதி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்