தமிழ் சினிமாவில் வெறும் ஐந்தே ஐந்து திரைப்படங்கள் இயக்கி மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், அங்கிருந்து கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து ரஜினியை வைத்து அவர், அடுத்த படத்தை இயக்குகிறார்.
விக்ரம் படத்தில் அவர் அறிமுகப்படுத்திய என் சி யூ கான்செப்ட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து லியோ திரைப்படத்திலும் அதனை பயன்படுத்தி இருந்தார். ஆனால் ரஜினியை வைத்து இயக்கும் திரைப்படத்தில், எல் சி யு கான்செப்ட்டை பயன்படுத்தவில்லை என்று லோகேஷ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் நரேன் லோகேஷ் கனகராஜின் எல் சி யு பற்றி சில வார்த்தைகள் கூறியிருந்தார். ஏற்கனவே அவர் கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில், எல் சி யூ வின் ஆரம்பம் குறித்து சிறிய குறும்படம் ஒன்றை லோகேஷ் இயக்க இருப்பதாகவும், இதில் தான் நடிக்க உள்ளதாகவும் கூறினார்.
கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சூட்டிங்கிற்கு முன்பாகவே, இந்தக் குறும்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓடிடியில் வெளியிடப்படும் குறும்படத்தில் அனிருத் தான் வாய்ஸ் ஓவர் கொடுக்கிறாராம். இந்நிலையில் இயக்கத்திற்கு நடுவே, தயாரிப்பு நிறுவனத்தையும் லோகேஷ் தொடங்கி இருக்கிறார். இதற்கு ஜி ஸ்குவாட் எனும் பெயர் வைத்துள்ளார்.
இவரது தயாரிப்பில், பைட் கிளப் என்னும் திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகிறது. உறியடி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த விஜயகுமார் தான் இந்தப் படத்திற்கு ஹீரோ. அப்பாஸ் என்பவர் இதனை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பைட் கிளப் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், காட்சிக்கு காட்சி ஆக்சன் சீன்கள் இருக்கிறதாம். வழக்கமாக தமிழ் சினிமா அடித்து துவைத்த கதையை இயக்குனர் எடுத்திருந்தாலும், கனமான கதாபாத்திரங்களின் படைப்பால் திரைக்கதை உயிர் பெற்று உள்ளதாம். முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி இரண்டுமே நன்றாக உள்ளதாகவும் விமர்சனங்கள் வருகின்றன. ஆக்சன் ரா திரைப்படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பைட் கிளப் ஏமாற்றத்தை கொடுக்காது என்று படத்தைப் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.





