இசைஞானி இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். அவரது மகன் வெங்கட்பிரபு என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த ஒன்றுதான். ஆனால் பெரியப்பா மற்றும் அப்பா போல, இசையில் ஆர்வமின்றி நடிக்க வந்தவர் வெங்கட்பிரபு, ஆரம்பத்தில் அவர் நடித்த சில படங்கள் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
அதன்பிறகு தனது அப்பா கங்கை அமரன் போல இயக்குனர் அவதாரம் எடுத்த வெங்கட்பிரபு இயக்கிய முதல் படம் சென்னை 28. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 படம் 2ம் பாகம், மாநாடு, தி கோட் உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட்பிரபு முன்னணி இயக்குனரானார்.
இதில் மங்காத்தா மாநாடு தி கோட் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க வெங்கட்பிரபு மிக ஆர்வமாக இருந்த நிலையில் அவர் சிபி சக்ரவர்த்தி ஏஆர் முருகதாஸ் சுதா கொங்கரா படங்களில் நடித்து முடித்த பின், அடுத்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை துவங்கலாம் என்று கூறிவிட்டார்.
இதையடுத்து சென்னை 28 படத்தின் 3ம் பாகம் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்த வெங்கட்பிரபு, அதை துவங்குவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் சமீபத்தில் கேரளாவுக்கு சென்று உழிச்சல் பிழிச்சல் எனப்படும் மூலிககை சிகிச்சை வைத்தியம் பெற்று திரும்பியிருக்கிறார். விரைவில் தனது அடுத்த படம் குறித்து வெங்கட்பிரபு அறிவிக்க வாய்ப்புள்ளது.
இப்போதுள்ள சினிமா நடிகர், நடிகையர் பலரும் கோடிக்கணக்கான தங்களது வருமானத்தை ஆடம்பரமாக செலவு செய்து வீணாக்காமல், அதை வருமானத்தை முதலீடாக போட்டு, நிரந்தர வருமானம் கிடைக்க ஏற்பாடுகள் செய்து விடுகின்றனர். வீடுகள், அபார்ட்மென்டுகள் கட்டி வாடகைக்கு விடுகின்றனர். ஓட்டல்களில் முதலீடு செய்கின்றனர். பிஸினஸ் செய்கின்றனர்.
அதே போல் இயக்குனர் வெங்கட்பிரபுவும் புத்திசாலித்தனமாக, சென்னை திருவான்மியூரில் ஈசிஆர் ரோட்டில் கடற்கரை ஓரமாக டப்பிங் ஸ்டுடியோக்களை கட்டியுள்ளார். அருகருகே எதிரெதிரே இருக்கும் இந்த ஸ்டுடியோவுக்கு 80 கிட்ஸ் நினைவாக ஒளியும் ஒலியும் என பெயரிட்டுள்ளார். நானும் 1980களில் பொதிகை டிவியில் ஒளியும் ஒலியும் பார்த்ததை மறக்கவில்லை என்பதை இதன்மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.





