நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. குறிப்பாக அவர் இயக்கி நடித்த 50வது படம் ராயன் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு வசூலித்த பெரிய வெற்றிப் படமாக தனுஷூக்கு இருந்தது. அதன்பிறகு அவர் நடித்த கேப்டன் மில்லர் குபேரா இட்லி கடை கர உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை.
இதில் குபேரா படம் மட்டும் தெலுங்கில் பெரிய வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகராக உள்ள நாகர்ஜூனா அதில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதே போல் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் பெரிய தோல்வியை தந்தது.
எனினும் ராயன் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்த நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 2024ம் ஆண்டில் தமிழில் பல நல்ல படங்கள் வெளியான நிலையில் வன்முறை நிறைந்த ராயன் கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது தரப்பட்டதும் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கிடையே நடிகர் தனுஷ் விரைவில் அரசியல் கட்சி துவங்கப் போகிறார் என்ற பரபரப்பும் கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. 2031ல் விஜய்க்கு எதிராக தனுஷ் தேர்தல் களத்தில் இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாலை நடிகர் தனுஷ் வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் ஜெயிலர் 2 அக்டோபர் 15ம் தேதி வெளியாவதால், அவர் மீதான மரியாதை காரணமாக ஓம் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது.
மேலும், தீபாவளி அன்று சூர்யா சார் படம் சீன் வெளியாவதால், முதலில் தேதியை அறிவித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தீபாவளி ரேசில் இருந்தும் விலகுவதாக நடிகர் தனுஷ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் பரஸ்பர புரிதல் அவசியம் என்ற அடிப்படையில் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.





