- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவின் 45 ஆவது திரைப்படத்திலிருந்து திடீரென விலகினாரா ஏ ஆர் ரகுமான்... அவருக்கு பதில் ஆட்டத்திற்குள்...

சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்திலிருந்து திடீரென விலகினாரா ஏ ஆர் ரகுமான்… அவருக்கு பதில் ஆட்டத்திற்குள் வந்த இளம் இசையமைப்பாளர்… என்ன நடக்குது இங்கே…

- Advertisement -

அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் படம் வசூல் செய்தது என்னவோ வெறும் 80 கோடி ரூபாய் மட்டும் தான். இத்தனைக்கும் பான் இந்தியா திரைப்படமாக இது வெளியாகி மண்ணைக் கவ்வியது.

 

- Advertisement -

இந்தப் படத்திற்குப் பிறகு தற்போது சூர்யா, அடுத்தடுத்து விரைவாக படங்களை கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். ஏனென்றால் கங்குவா திரைப்படத்திற்கு மட்டும் அவர் ஒட்டுமொத்தமாக ஒன்றரை ஆண்டுகள் செலவழித்து இருந்தார். கிட்டத்தட்ட அவரை திரையில் பார்ப்பதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

 

- Advertisement -

இனி அப்படி ஒரு நிலைமை இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் சூர்யா. இதனை கருத்தில் கொண்டுதான் அவர் கார்த்திக் சுப்பராஜ் உடனான படத்தை வெறும் நான்கே மாதங்களில் முடித்துக் கொடுத்தார். தற்போது யாரும் எதிர்பாராத வகையில் ஆர்ஜே பாலாஜியுடன் அவர் கை கோர்த்திருக்கிறார்.

 

ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கி நடித்தவர். தனது நண்பர் சரவணனுடன் இணைந்து அவர் மூக்குத்தி அம்மனை கொடுத்தார். தற்போது இந்த வித்தியாசமான ஜோடி இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

இதில் திரிஷா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேசமயம் சூர்யாவுக்கு இந்த திரைப்படத்தில் ஜோடி ஏதும் கிடையாது என்று கூறப்படுகிறது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதன் சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் சொந்தக்காரணங்களுக்காக ஏ ஆர் ரகுமான் ஒரு வருடம் வரை, இசையமைப்பதில் இருந்து பிரேக் விட முடிவு செய்து இருக்கிறார். இதனால் அவருக்கு பதில் இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்காரை படக்குழு நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே யூடியூப் களில் மிகவும் பிரபலமானவர்தான் இந்த சாய் அபயங்கார். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் திரைப்படத்தின் மூலம் அவர் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். தற்போது சூர்யாவின் 45 வது திரைப்படத்தையும் அவர் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்