- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு போட்டியாக அவர், கமலுக்கு போட்டிய இவர் செய்யும் தில்லுமுல்லுகளை தோலுரித்துக் காட்டிய பிரபலம் -...

விஜய்க்கு போட்டியாக அவர், கமலுக்கு போட்டிய இவர் செய்யும் தில்லுமுல்லுகளை தோலுரித்துக் காட்டிய பிரபலம் – இன்னமுமாடா இந்த ஊர் நம்மள நம்புது?

- Advertisement -

தமிழ் சினிமாவில் போட்டி மிக மிக அதிகம். சராசரி மனிதர்களை காட்டிலும் சினிமாத்துறையில் போட்டியும், பெறாமையும் மிக அதிகம். அதுவும் ஒருவரது வாய்ப்பை மற்றவர் தட்டிப் பறிப்பதும், மற்றவருக்கு கிடைக்க வேண்டிய புகழ், வேறு ஒருவருக்கு போய் சேருவதும், ஒருவரை பின்னுக்கு தள்ளி, மற்றவர் முந்திக்கொண்டு முன்னேறுவதும் தமிழ் சினிமாவில் அதிகமாக நடந்து வருகிறது.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இனி அரசியலிலும் தன் செல்வாக்கை நிரூபிக்க, அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார். வரும் 2026ம் ஆண்டில் நடக்க உள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை மக்கள் மத்தியில் பலப்படுத்த தொடர்ந்து கட்சியினருடன் ஆலோசித்து வருகிறார்.

இதற்கிடையே பல ஆண்டுகளுக்கு முன்பே, மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை துவங்கி, சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொண்டார் நடிகர் கமல்ஹாசன். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோற்றுப் போனார்.

எனினும், களத்தில் நின்று போராடுபவர்களாக விஜய், கமல் மாறிவிட்ட சூழ்நிலையில் இவர்களுடன் போட்டி போடுவதை மட்டும் இன்னும் திரைமறைவில் நின்று செய்துக்கொண்டு இருக்கும் இருவர் வேறு யாருமல்ல, நடிகர் அஜீத்குமாரும், நடிகர் ரஜினிகாந்தும்தான். விஜய்க்கு குறித்த ஒரு விஷயம் மீடியாவில் பரபரப்பானால், அங்கு அஜீத் சார்ந்த ஏதேனும் ஒரு விஷயம் வந்துவிடும். அதுபோல் கமலுக்கு பப்ளிசிடி கிடைத்தால், ரஜினி அங்கும் வந்து விடுகிறார்.

இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், தனது எக்ஸ் பதிவில் ஒரு விஷயத்தை பதிவிட்டுள்ளார். அது இப்போது செமையாக வைரலாகி வருகிறது.
தல; ஊருக்குள்ள என்ன வைரல் டாபிக் என்கிறார். விஜய் கள்ளக்குறிச்சி போனது என்ற பதில் கிடைக்கிறது. அப்படின்னா நம்ம கார் ரேஸ் போட்டோவை இறக்கு என்று அஜீத் சொல்கிறார்.

அதற்கு கீழே மற்றொரு உரையாடல் வருகிறது. அதில், தலைவர்; ஊருக்குள்ள… என்று கேட்கிறார். அதற்கு, லோகேஷ் கனகராஜ், இந்தியன் 2 என்கிறார். உடனே, கூலி மேக்கப் போட்டோவை இறக்கி வுடு என்கிறார். ஆக, விஜய்க்கு போட்டியாக அஜீத்குமாரும், கமலுக்கு போட்டியாக ரஜினியும் இப்படித்தான் தங்கள் இமேஜை காப்பாற்றிக்கொள்ள செயல்பட்டு வருகின்றனர், என்று சொல்லி, அவர்களை கலாய்த்திருக்கிறார் ப்ளு சட்டை மாறன்.

Actor Vijay

சற்று முன்