பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்தவர் ஜெய். இந்த படம் மாஸ் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் ஜெய் பல படங்களில் நடித்தார். அதில் சுப்ரமணியபுரம் எங்கேயும் எப்போதும் சென்னை 28 ராஜா ராணி கலகலப்பு 2 போன்ற சில படங்கள் மட்டுமே பெரிய அளவில் வெற்றி பெற்றன. மற்ற படங்கள் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜெய் கூறியதாவது, நான் பகவதி படத்துக்கு நடிகர் விஜய் நடித்த பல படங்களில் தம்பி ரோலில் நடிக்க அவரிடம் மீண்டும் வாய்ப்பு கேட்டேன். மறுபடியும் அப்படி ஒரு எனக்கு வாய்ப்பு அமையலே. இது எனக்கு ரொம்பவும் ஏமாற்றமாக இருந்தது.
ஒருமுறை விமானத்தில் போகும் போது என்கிட்ட விஜய் பேசினார். அப்போ நீ நடிச்ச ரெண்டு மூனு படங்கள் சரியாக போகலேன்னு மறுபடியும் தம்பி ரோல் மாதிரி பண்ணலாமுன்னு போசிக்கிறயா? என் மைண்டுல அப்படி ஒரு யோசனையே இல்லை. ஹீரோ எப்படி நடிக்கறதுன்னு நாம பார்த்துப்போம்.
ஆனா அவர் கூட தம்பியா நடிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். இல்ல அண்ணா அப்படி எல்லாம் யோசிக்கலே என்று சொன்னேன். ஒரு ஹீரோன்னா பெரிய வெற்றி படம் கொடுத்த அடுத்த மூனு நாலு படத்துக்கு பிளாப் கொடுத்தாலும் அது தாங்கும். இந்த பிளாப்புக்கு நடுவே உன்னோட அடுத்த ஹிட் படத்தை எப்படி கொடுக்கணும் என்று நீ பார்த்துக்கணும். இது எங்கேயும் எப்போதும் படத்துக்கு முன்னாடி இது நடந்தது.
சுப்ரமணியபுரம் ஹிட் ஆனதுக்கு அப்புறம் நான் நடிச்ச 3 படம் சரியாக போகலே. நல்ல போகஸ் பண்ணி கதையை கேட்டீன்னா எது இம்பார்ட்டுன்னு உனக்கே தெரியும். அப்படி பண்ணினா சக்ஸஸ் பண்ணிடலாம் என்று விஜய் அண்ணா பெரிய அட்வைஸ் பண்ணினார். அடுத்த படமே எங்கேயும் எப்போதும் படம் ரிலீஸாகி ஹிட் ஆயிடுச்சு.
எப்பவுமே விஜய் அண்ணா ஒருமுறை அட்வைஸ் செய்வார். திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை அவர் பேச மாட்டார். அவர் சொன்னதை ஏத்துக்கிட்டா ஏத்துக்க, இல்லேன்னா விட்டுடு என்ற பாணியில் தான் அவர் அட்வைஸ் செய்வார். அதுக்கு அப்புறம் பலமுறை நாங்க பேசியிருக்கோம். ஆனா அன்று சொன்ன அந்த அட்வைஸை அவர் திரும்ப எனக்கு சொல்லலே என்று நடிகர் ஜெய் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





