- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை நடிகையாக்க என் தந்தை விரும்பவில்லை, அவரது கனவு வேறாக இருந்தது - லக்கி பாஸ்கர்...

என்னை நடிகையாக்க என் தந்தை விரும்பவில்லை, அவரது கனவு வேறாக இருந்தது – லக்கி பாஸ்கர் பட நாயகி மீனாட்சி செளத்ரி இப்படி சொல்லிட்டாங்களே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் அழகாக இருந்தாலும், முக்கிய கேரக்டர்களில் நடித்து தங்களது நடிப்பை வெளிப்படுத்தினாலும் அந்த படங்கள் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே, ரசிகர்களிடம் தனி கவனத்தை பெற முடியும். போதிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் அமையும்.

அந்த வகையில் நடிகை மீனாட்சி செளத்ரி, சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்தார். ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனால் மீனாட்சி சௌத்ரிக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. அதே நேரத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில், தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த நிலையில், மீனாட்சி சௌத்ரி திரையில் வந்ததே சில காட்சிகள்தான். ஒரு பாடல் காட்சி மற்றும் அவரை விஜய் கொல்லும் காட்சி என 2 காட்சிகளில் மட்டுமே மீனாட்சி சௌத்ரி தனியாக தெரிவார். மற்றபடி தி கோட் படத்தில் மீனாட்சி சௌத்ரிக்கு போதிய முக்கியத்துவம் தராமல் இயக்குனர் வெங்கட்பிரபு ஏமாற்றி விட்டார் என்பதே உண்மை.

ஆனால் இதற்கு முன்பே ஹிட், கில்லாடி, குண்டூர் காரம் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்திருந்த மீனாட்சி சௌத்ரிக்கு சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இந்த படத்தில் நாயகன் துல்கர் சல்மான் அதாவது லக்கி பாஸ்கர் மனைவியாக சுமதி என்ற கேரக்டரில் ஒரு பிள்ளைக்கு தாயாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை மீனாட்சி சௌத்ரி.

- Advertisement -

இந்த படத்தில் தன் கணவரின் வறுமையை பொறுத்துக்கொண்டும், பிள்ளையின் ஏமாற்றங்களை சகித்துக் கொண்டும் ஒரு கட்டத்தில் கணவரின் செல்வாக்கை பார்த்து ஆச்சரியப்படுவதும் அதே நேரத்தில் கணவரின் செயல்பாட்டில் வரும் கர்வத்தை கண்டு தட்டிக்கேட்பதும் என நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி மீனாட்சி செளத்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் மீனாட்சி சௌத்ரி கூறியதாவது, என் தந்தை ராணுவ வீரர் என்பதில் மிகவும் கட்டுப்பாடுகளுடன் நான் வளர்ந்தேன். பள்ளி, கல்லூரிகளில் படித்த போது என் தந்தை என்னை பல விளையாட்டுகளில் ஈடுபட வைத்தார். பேட்மிண்டன் போட்டியில் மாநில அளவில் பங்கேற்று விளையாடி இருக்கிறேன். என்னை விளையாட்டு வீராங்கணை ஆக்க வேண்டும் என்று எனது தந்தை கனவு கண்டார். ஆனால் நான் சினிமா நடிகையாகி விட்டேன், என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்