- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 69 படத்தில் விஜய் நடிப்பது அந்த கேரக்டரிலா? நடிகர்கள் அறிமுக போஸ்டர்களின் அம்பலமான டிவிஸ்ட்...

விஜய் 69 படத்தில் விஜய் நடிப்பது அந்த கேரக்டரிலா? நடிகர்கள் அறிமுக போஸ்டர்களின் அம்பலமான டிவிஸ்ட் – அட கடைசி படத்திலும் அதே கெட்டப் தானா? – ஏமாற்றத்தில் ரசிகர்கள்

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த மாதத்தில் பனையூரில் நடந்த விழா ஒன்றில் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற கட்சி பாடலையும் வெளியிட்டார். வருகிற 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியில் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இதற்கிடையே நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடந்தது. நாளை பையனூரில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், நரேன், கவுதம் வாசுதேவ் மேனன், வில்லனாக பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

- Advertisement -

விஜய் நடிக்கும் இந்த படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்க விஜய் சம்பளம் ரூ. 275 கோடி என்று சொல்லப்படுகிறது.

விஜய் 69 படம், கண்டிப்பாக அரசியல் படமாக தான் இருக்கும். ஏனெனில் விஜய் இந்த படத்தில் கடைசியாக நடித்துவிட்டு, அரசியலில் முழு ஈடுபாடு காட்டப் போகிறார். அதனால் அவரது படத்தில் நிச்சயமாக அரசியல் வசனங்களும், காட்சிகளும் நிச்சயமாக இடம்பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் இது கமர்ஷியல் படமாக தான் உருவாகிறது என்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் எச் வினோத் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது சில தினங்களாக தளபதி 69 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு போஸ்டர்களை கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த போஸ்டர்களில் புல்லட் சேம்பர் மற்றும் துப்பாக்கி போன்ற குறியீடுகள் இருப்பதால், இந்த படத்திலும் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக தான் நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

ஏற்கனவே நடிகர் விஜய் பல படங்களில் போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். குறிப்பாக தெறி படத்தில் அவரது போலீஸ் அதிகாரி கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால் இந்த படத்திலும் அவர் போலீசாக நடிப்பதால் இந்த படம் தெறி 2 பாகம் போல இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விஜய் நடிக்கும் கடைசி படத்திலும் போலீஸாக நடிக்கிறாரா என்று ரசிகர்கள் பலத்த அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்