ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கான திரைக்கதையை மட்டும் அவர் ஆறு மாதங்களுக்கு மேலாக எழுதி இருந்தார். தனது முந்தைய திரைப்படமான லியோவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் போது அதன் ரிலீஸ் தேதியையும் கூறியிருந்தார் ரஜினிகாந்த்.
ஆனால் இந்த முறை அவர் அப்படி செய்யவில்லை. படத்தை மிக பொறுமையாக எடுத்த திட்டமிட்டு அதற்காக காய்களை நகர்த்தி வருகிறார். ரஜினியும் லோகேஷ் கனகராஜ் திரைக்கதை எழுதும் போது மாதம் தோறும் செல்போனில் அழைத்து அதற்கான விவாதத்தில் ஈடுபட்டார். கதை அம்சத்தையும் அவர் கேட்டதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் சில மாதங்களுக்கு முன்பு கூலி படத்திற்கான சூட்டிங் தொடங்கியது. முதலில் ஹைதராபாத்தில் தான் இதற்கான படப்பிடிப்பை நடத்தினார் லோகேஷ் கனகராஜ். பிறகு அங்கிருந்து, விசாகப்பட்டினத்திற்கு அனைவரும் சென்றனர். அங்குள்ள துறைமுகத்தில் பிரம்மாண்ட செட் போட்டு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் அனிருத் தான் இந்த திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து கூலி படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
இதில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதுபோக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சோபின் சபீர், சத்யராஜ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இதில் ரஜினிகாந்த் தேவா என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார். சமீபத்தில் இதற்கான படப்பிடிப்பு ஜெயப்பூரில் நடைபெற்றது. அதில் இந்தி நடிகர் அமீர்கான் கலந்து கொண்டது உறுதியாகி இருக்கிறது.
இப்படியான சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு கூலி திரைப்படத்திலிருந்து, சிக்கிடு வைப் என்னும் பாடலின் வீடியோ வெளியாகி இருக்கிறது. வெறும் ஒரு நிமிடம் மட்டும் ஓடும் அந்த வீடியோவில் ரஜினியின் நடன அசைவுகள் காண்போரை கவர்ந்து உள்ளன. இளம் ஹீரோக்களுக்கு போட்டி கொடுத்து ரஜினி நடனம் ஆடுவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.





