- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் டைரக்‌ஷனில் நடிக்க விஜய் ஓகே சொன்னபோது நான் ரொம்பவும் பயந்தேன், படத்தை பார்த்த பிறகு...

என் டைரக்‌ஷனில் நடிக்க விஜய் ஓகே சொன்னபோது நான் ரொம்பவும் பயந்தேன், படத்தை பார்த்த பிறகு அவர் என்ன சொன்னார் தெரியுமா? – வெளிப்படையாக சொன்ன பிரபல இயக்குனர்!

- Advertisement -

நடிகர் விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. என்னதான் சிறந்த கதையாக இருந்தாலும் அந்த ஹீரோவுக்கான கதையாகவும் அது இருக்க வேண்டும். அதே நேரத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த படமாகவும் அது அமைய வேண்டும். அதனால் ஒரு இயக்குனர் இந்த 2 விஷயங்களிலும் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே, அந்த படம் வரவேற்பை பெறும்.

நடிகர் விஜய் நடித்த பல படங்களில் அவருக்கு மாஸ்ஹிட் ஆக்‌ஷன் படங்களாக அமைந்த படங்களில் திருப்பாச்சி, சிவகாசி ஆகிய 2 படங்களும் மிக முக்கியமான படங்களான இருந்தன. இந்த 2 படங்களுமே மிகப்பெரிய அளவில் விஜய்க்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி, திருப்பதி ஆகிய படங்களை இயக்கிய பேரரசு, இந்த 2 படங்களையும் இயக்கி இருந்தார்.

- Advertisement -

விஜய் நடிப்பில் திருப்பாச்சி 2005ம் ஆண்டில் ஜனவரியில் பொங்கலுக்கு வெளியானது. அதே ஆண்டில் நவம்பரில் சிவகாசி படம் வெளியானது. இதில் திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவும், சிவகாசி படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசினும் நடித்திருந்தனர். தனது படங்களுக்கு ஊர் பெயர்களை டைட்டிலாக வைக்கும் பேரரசு, விஜய் படங்களுக்கும் ஊர் பெயர்களையே வைத்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் சதுரங்க ஆட்டம் ஆரம்பம் என்ற புதிய படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு பேசியதாவது, இன்றைக்கு ஓபனிங் என்பது தமிழ் சினிமாவில் நான்கைந்து ஹீரோக்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி என்னதான் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் மக்களுக்கு பிடித்திருந்தால்தான் அந்த படம் வெற்றி அடைகிறது.

- Advertisement -

என் முதல் படத்திற்காக நடிகர் விஜயிடம் கதை சொன்ன போது 3வது முறை தான் அவர் ஓகே என்று சொன்னார். அப்படி சொன்னதும்தான் எனக்கு பயம் வந்தது. நான் அறிமுக இயக்குனர். அவர் மாஸ் ஹீரோ. கதையை நம்பி படத்தை நம்மிடம் ஒப்படைத்து இருக்கிறார் என்று பயம் ஏற்பட்டது.

படம் எடுத்து முடிந்ததும் விஜய் சார் படத்தை பார்த்துவிட்டு, கதையில் சொன்னதை விட 3 மடங்கு நன்றாகவே எடுத்திருக்கிறீர்கள், என்றார். அப்போதுதான் எனக்கு திருப்தி வந்தது. முன்பு விமர்சனங்களை பார்த்துவிட்டு மக்கள் படத்துக்கு சென்றார்கள். இப்போது மக்களே விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மக்களுக்கு பயந்துதான் நாம் படம் எடுக்க வேண்டும் என்று அந்த விழாவில் இயக்குனர் பேரரசு பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்