- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை விட மனோபாலா நடிப்பு நல்லா இருந்துச்சு - பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரே இந்த பிரபல...

அவரை விட மனோபாலா நடிப்பு நல்லா இருந்துச்சு – பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரே இந்த பிரபல நடிகர்

- Advertisement -

நடிகர் மனோபாலா, தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து, பின் நடிகராக மாறியவர். கடந்த 10 ஆண்டுகளில் தமிழில், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தார். காமெடி காட்சிகளில் மட்டுமின்றி அவ்வப்போது கம்பெனி மேஜேனர், ஷோ ரூம் ஓனர், மந்திரவாதி, சாமியார் போன்ற சின்ன சின்ன கேரக்டர்களில் கூட மனோபாலா நடித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன், நடிகர் மனோபாலா காலமானார். அதற்கு முன் அவர் நடித்த படம்தான் சந்திரமுகி 2. அந்த படம், இன்று வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடித்த மனோபாலா குறித்து, பிரபல சினிமா நடிகர் மீசை ராஜேந்திரன் பேசி இருக்கிறார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன், தெலுங்கு பட ஷூட்டிங்கில் நடிப்பதற்கு சென்றிருந்தேன். எனக்கான காட்சியில் நடிக்க இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால், ரூமுக்கு போயிட்டு வாங்க என, படப்பிடிப்புக் குழுவினர் கூறினா் ஆனால் அப்போது பக்கத்து பங்களா ஒன்றில், சந்திரமுகி 2 படப்பிடிப்பு நடப்பதாக தெரிய வந்தது. நான் அங்கு சென்றேன்.

அங்கு இருந்த கேமரா மேன் எனக்கு நண்பர் என்பதால் அங்கு இருந்த இயக்குநர் பி.வாசு, மாஸ்டர் ராகவா லாரன்ஸ், ராதிகா உள்ளிட்டோரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களும் என்னிடம் சகஜமாக பேசினர். அப்போது படத்தின் சில காட்சிகளை எடுத்துக்கொண்டு இருந்ததை பார்த்தேன்.

- Advertisement -

அப்போது, ஒரு மந்திர கட்டத்தில் டார்ச் லைட்டை வைத்து சுற்றி விடுவர். மனோபாலா, வடிவேலு, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அதை சுற்றி நிற்பர். டார்ச்லைட் நின்று யார் மீது வெளிச்சம் அடிக்கிறதோ, அவருக்குதான் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்வதைப் போன்ற காட்சியை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்த காட்சியில் மந்திரவாதியாக நடித்த மனோபாலா நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. அற்புதமாக நடித்தார். ஆனால், அந்த காட்சியில் வடிவேலு நடிப்பை நேரடியாக பார்த்தேன். அவ்வளவு சிறப்பாக இல்லை. மனோபாலா நடிப்பை விட சுமாராகவே இருந்தது என, கூறி இருக்கிறார் நடிகர் மீசை ராஜேந்திரன். வடிவேலு, காமெடி நடிப்பில் உச்சத்தில் இருந்த போது, அவருடன் பல காமெடி காட்சிகளில் நடித்தவர்தான் இந்த மீசை ராஜேந்திரன் என்பதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்