- Advertisement -
Homeபொழுதுபோக்குமலேசியா சென்ற நடிகர் சிம்பு… நடிகர் அஜீத்குமாருடன் திடீர் சந்திப்பு - போடு வெடிய என...

மலேசியா சென்ற நடிகர் சிம்பு… நடிகர் அஜீத்குமாருடன் திடீர் சந்திப்பு – போடு வெடிய என கொண்டாடும் எஸ்டிஆர் ரசிகர்கள்!

- Advertisement -

குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் இந்த ஆண்டு முழுவதும் எந்த படத்திலும் நடிக்கவில்லை. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை பல்வேறு நாடுகளில் நடந்த கார் ரேஸில் பங்கேற்றார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராக இருந்த அவர் பல போட்டிகளில் முக்கிய இடங்களில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது மலேசியாவில் நடந்து வரும் எப்4 கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துக்கொள்ள நடிகர் அஜீத்குமார் சென்றிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள பிரசித்த பெற்ற முருகன் கோவிலுக்கு சென்ற அவர் சுவாமி தரிசனம் செய்தார். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பில்லா படத்தில் சேவல் கொடி பறக்குதடா என்ற பாடல் காட்சி அந்த முருகன் கோவில் முன்புதான் படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் நடிகர் அஜீத்குமாருடன் நடிகர் சந்தானமும் இணைந்து நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் காமெடி ரோலில் சந்தானம் நடித்திருந்தார்.

இந்நிலையில் மலேசியாவில் நடந்த நகை கடை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் சிம்பு சென்றிருக்கிறார். அங்கு கடை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் அரசன் படத்தின் படப்பிடிப்பு எப்போது என்ற அப்டேட் தந்து அவரது ரசிகர்களை குதூகலிக்க செய்தார். இதையடுத்து நடிகர் சிம்பு நடிகர் அஜீத்குமாரை நேரில் சந்தித்துள்ளார்.

- Advertisement -

கார் ரேஸ் நடக்கும் பகுதிக்கு நேரில் சென்ற நடிகர் சிம்பு அங்கு இருந்த நடிகர் அஜீத்குமாரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டு நடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சந்திப்பின் போது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மலேசியாவில் நடிகர் சிம்பு இருந்ததால் நட்பு ரீதியாக அஜீத்குமாரை அவர் நேரில் சென்று சந்தித்து இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் நடிகர் சிம்புவுக்கு எப்போதுமே நடிகர் அஜீத்குமார் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை அன்பு இருப்பதால் அதன் காரணமாகவும் அவர் அஜீத்குமாரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்