- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க சொல்றதை நாங்க கேட்கணும், அப்போ நாங்க சொல்றதை நீங்க கேட்ட மாட்டீங்களா? அஜீத்குமாருக்கு ரசிகர்களின்...

நீங்க சொல்றதை நாங்க கேட்கணும், அப்போ நாங்க சொல்றதை நீங்க கேட்ட மாட்டீங்களா? அஜீத்குமாருக்கு ரசிகர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை – இது கொஞ்சம் விவகாரமா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஸ்டார் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜீத்குமார்தான். இதில் நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் குதித்து விட்டார். அதனால் தனது 69வது படத்துடன் அவர் சினிமாவுக்கு ஏற்கனவே குட்பை சொல்லி விட்டார். இப்போது ரஜினி, கமல், அஜீத்குமார் வரிசையில் அடுத்து சிவகார்த்திகேயனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் வருகிற ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்துவரும் குட்பேட் அக்லி படமும் வருகிற மே 1ம் தேதி, தொழிலாளர் தினத்தன்று அஜீத்குமார் பிறந்த நாளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே சமீபகாலமாக அஜீத்குமாரின் ரசிகர்கள் பொது இடங்களில், சினிமா தியேட்டர்களில், கோவில்களிலும் கூட மக்கள் கூட்டமாக உள்ள இடங்களில் கடவுளே அஜீத்தே என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர். இது ஒரு விதத்தில் பலரும் திகைப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு விதத்தில் அஜீத்குமாரை அவமதிக்கும் செயலாகவும் உள்ளது.

ஏனெனில் தனக்கு அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம், தன்னை தல என்றும் ரசிகர்கள் அழைக்க வேண்டாம். அஜீத்குமார் அல்லது ஏகே என்று சொன்னால் போதும் என்று ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார். ஆனால் அஜீத்குமார் ரசிகர்கள் இப்படி பொதுவெளியில் கடவுளே அஜீத்தே என கோஷமிடுவது தொடர்ந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்ட அஜீத்குமார், ரசிகர்களிடம் அன்பு வேண்டுகோளாக இனி அப்படி என் பெயரை வைத்து கோஷம் போட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இப்போது அதற்கு பதிலாக அஜீத்குமாருக்கு அவரது ரசிகர்கள் புதிய வேண்டுகோள் ஒன்றை வைத்து வருகின்றனர்.

அதாவது கங்குவா, அண்ணாத்த போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கும் படம் எதிலும் இனிமேல் நீங்கள் நடிக்க கூடாது. வீரம், விஸ்வாசம், வேதாளம் என ஒரே மாதிரியான அவரது கதைகளில் தொடர்ந்து நடித்தால் உங்களது இமேஜ் பாதிக்கப்படும். அதுவும் கங்குவா போன்ற மோசமான பிளாப் படத்தை தந்த அவரது இயக்கத்தில் தயவு செய்து நீங்கள் இனி நடிக்க வேண்டாம் என்ற கமெண்டுகளை, இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்