- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைக்காதற்கு ரஜினிதான் காரணமா? - கமல்ஹாசனை மீறி செயல்பட்டதா...

இந்தியன் 2 படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைக்காதற்கு ரஜினிதான் காரணமா? – கமல்ஹாசனை மீறி செயல்பட்டதா லைகா தயாரிப்பு நிறுவனம்?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடித்த படங்களில் மிக முக்கியமான ஒரு படமாக இந்தியன் இருந்து வருகிறது. அந்த படம் பெற்ற மாபெரும் வெற்றி காரணமாக இப்போது இந்தியன் 2, இந்தியன் 3 என அடுத்தடுத்த பாகங்களாக அந்த படம் வெளிவருகிறது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மிக சிறப்பாக இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1996ம் ஆண்டில் வெளிவந்த இந்தியன் படத்தில், சேனாபதி கேரக்டரில் இந்தியன் தாத்தாவாக நடித்த கமலுக்கு, சிறந்த நடிகர் தேசிய விருது 3வது முறையாக கிடைத்தது. ஏற்கனவே நாயகன், மூன்றாம் பிறை படங்களுக்கு அவர் தேசிய விருது பெற்றிருந்தார். இந்தியன் படம், இப்போது ரி ரிலீஸ் செய்யப்பட்டு, அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்தியன் படத்தை பொருத்தவரை படம் மட்டுமின்றி படத்தின் பிஜிஎம் இசையும், பாடங்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். அக்கடான்னு நாங்க உடை போட்டா, மாயா மச்சீந்திரா, டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா, கப்பலேறி போயாச்சு, சுத்தமான ஊராச்சு, பச்சைக்கிளிகள் தோளோடு போன்ற பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்திருந்தன.

இந்தியன் 2 படத்துக்கும் ஏஆர் ரகுமான்தான் இசையமைப்பாளர் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவரை புறக்கணித்துவிட்டு, இந்த படத்துக்கு அனிருத்தை, டைரக்டர் ஷங்கர் இசையமைக்க வைத்துவிட்டார் என்று கூறப்பட்டது. மேலும், ஏஆர் ரகுமான் அளவுக்கு இந்தியன் 2 படத்தில் அனிருத் இசை எடுபடுமா, என்பதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

- Advertisement -

இதற்கிடையே ஏஆர் ரகுமான் அளித்த நேர்காணல் ஒன்றில், இந்தியன் 2 படத்துக்கு என்னை இசையமைக்குமாறு கமல்ஹாசன் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் ஷங்கர் என்னிடம் இதுபற்றி பேசவில்லை. ஒருவேளை தன் படத்துக்கு வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்க அவர் விரும்பியிருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைக்க காரணம், நடிகர் ரஜினிகாந்த் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. லைகா புரடக்சன் படத்தில் ரஜினிகாந்த் நடித்த போது, இந்தியன் 2 படத்துக்கு அனிருத்தை இசையமைக்க ரஜினி சிபாரிசு செய்திருக்கிறார். அதை லைகா புரடக்சன் நிறுவனமும் ஏற்றுக்கொண்டு, கமல்ஹாசனின் விருப்பத்தை நிராகரித்து, அனிருத்தை இந்தியன் 2 படத்துக்கு கமிட் செய்துள்ளது. இயக்குனர் ஷங்கரும் ரஜினிகாந்த் சிபாரிசு என்பதால், மறுக்காமல் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். அனிருத், லதா ரஜினிகாந்தின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்