- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் மீண்டும் திரையில் தோன்றுகிறார்; படைத்தலைவன் படம் குறித்து பேசிய டைரக்டர் அன்பு - அப்போ...

விஜயகாந்த் மீண்டும் திரையில் தோன்றுகிறார்; படைத்தலைவன் படம் குறித்து பேசிய டைரக்டர் அன்பு – அப்போ தரமான சம்பவம் ரெடியா இருக்கு!

- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றில் என்றென்றும் மறக்க முடியாத ஒரு சிறந்த நடிகர், பண்பாளர், மனிதநேய மிக்க நல்ல மனிதராக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். கடந்தாண்டு இறுதியில் கேப்டன் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார். எனினும் அவர் புகழ் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மங்கவில்லை. இன்னும் கேப்டன் வழி நடக்கும் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் இருக்கின்றனர்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் படத்தில், ஏஐ தொழில் நுட்பத்தில் ஒரு நிமிட காட்சியில் விஜயகாந்த் நடித்திருந்தார். ஆனால் அது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. இப்போது விஜயகாந்த் மகன் நடித்துள்ள படைத்தலைவன் என்ற படத்திலும், விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அந்த படத்தின் இயக்குனர் அன்பு கூறியதாவது, மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் படைத்தலைவன் என்ற படத்தில் எனது இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளோம்.

இந்தப் படத்தில் நிச்சயமாக அவரது கேரக்டர் ரசிகர்களை மிகவும் கவரக்கூடியதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் படத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் இடம்பெற்ற நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்ற பாடலையும் பயன்படுத்தி இருக்கிறோம்.

- Advertisement -

இந்த பாடலை ஏற்கனவே லப்பர் பந்து என்ற படத்தில் பயன்படுத்தி இருந்தார்கள். ஆனால் நாங்கள் அவர்களுக்கு முன்பே இந்த பாடலை படைத்தலைவன் படத்தில் வைத்து விட்டோம். ஆனால் எங்கள் படம் திரைக்கு வர தாமதமாகிவிட்டது. அதனால் லப்பர் பந்து படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி முதலில் வந்துவிட்டது.

குறிப்பாக படைத்தலைவன் படத்தில் விஜயகாந்த், அவரது மகன் சண்முக பாண்டியனுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தும் விதமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது என்று இயக்குனர் அன்பு கூறியிருக்கிறார். இது தேமுதிக கட்சி தொண்டர்களையும் கேப்டன் ரசிகர்களையும் உற்சாகம் அடைய செய்துள்ளது. தி கோட் படம் போல் இல்லாமல், கேப்டனை சிறப்பாக காட்டியிருப்பார்கள் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்