1990 களிலேயே பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் ஷங்கர். அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் தான் அவரது முதல் திரைப்படம். ஏ ஆர் ரகுமான் இசையில் இதன் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆக, படமும் சக்கை போடு போட்டது. பிறகு பிரபு தேவாவை வைத்து காதலன் திரைப்படத்தை இயக்கினார். அதுவும் வெற்றியாகவே அமைந்தது.
சங்கரின் திரை உலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையையும், ஒரு லேண்ட் மார்க் ஆகும் அமைந்த திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம், 1997 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இதில் சேனாதிபதி சந்துரு என இரண்டு கதாபாத்திரங்களில் தந்தை மகன் ரோலில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
இதில் சேனாதிபதி கதாபாத்திரம் பலருக்கும் பேவரட்டாக அமைந்திருந்தது. லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் கனமான தாத்தா கதாபாத்திரத்தில் வந்திருந்தார் கமல்ஹாசன். இதற்காக தனது உடல் மொழியையும் குரலையும் மாற்றி அமைத்து பலரையும் ரசிக்க வைத்திருந்தார் கமல்ஹாசன்.
இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதன் பிறகு இயக்குனர் சங்கர், ஜீன்ஸ் பாய்ஸ் சிவாஜி எந்திரன் நண்பன் என பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். இப்படியான சூழலில் தான் மீண்டும் சங்கர் மற்றும் கமல்ஹாசன் இணைந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தந்தனர்.
கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்பு மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற சூழலில், இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. திரைக்கதை சுத்தமாக எடுபடவில்லை என்று பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஒரு சிலர் அந்த திரைப்படத்தை பயங்கரமாக கலாய்த்தனர். இப்படியான சூழலில், சங்கர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இது வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கூறிய அவர், இந்தியன் 2 திரைப்படத்திற்கு இத்தனை எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பரவாக இல்லை இப்போது நான் அதிலிருந்து மேம்பட்டு அடுத்த படத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 திரைப்படம் அப்படித்தான் இருக்கும். நிச்சயமாக இந்தியன் 3 திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும். கேம் சேஞ்சர் திரைப்படம் முழுக்க முழுக்க திருப்திகரமாக வந்திருக்கிறது. அரசியல்வாதிக்கும் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் மோதல் தான் இந்த திரைப்படம் என்று கூறி இருக்கிறார். கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.





