தமிழ் சினிமாவில் இன்று கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காதல் கலந்த காமெடி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சிவகார்த்திகேயன். மெரினா, எதிர்நீச்சல், மனம் கொத்திப் பறவை, ரஜினி முருகன், ரெமொ, சீமராஜா போன்ற படங்களில் அவரது ஜாலியான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆனால் வேலைக்காரன், டாக்டர், அயலான், மாவீரன், அமரன் போன்ற படங்களில் சிவகரா்த்திகேயனின் நடிப்பு மிகவும் அழுத்தமாக இருந்தது. குறிப்பாக மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் சிவகார்த்திகேயனில் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இதுவரை 325 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்த இந்த படம் வருகிற 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அமரன் படத்துக்கு முன்னதாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கமிட் ஆகி நடித்த படம் எஸ்கே 23. இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.இந்த படத்தின் படப்பிடிப்புக்கு இடையேதான், அமரன் படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்கே 23 படத்தில் சிவகார்த்திகேயன் பிரேக் எடுத்துக்கொண்ட நிலையில், இந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த சென்றுவிட்டார். இப்போது சிக்கந்தர் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில், வருகிற மார்ச் இறுதியில்தான் அந்த படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.
அதனால் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங்கை முடித்த பிறகுதான். மீண்டும் எஸ்கே 23 படப்பிடிப்பை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் துவங்க உள்ளார். அதற்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால், அதுவரை நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதால்தான் உடனே டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் எஸ்கே 24 படத்துக்கு கால்ஷீட் தந்த சிவகார்த்திகேயன், ஷூட்டிங்கையும் விரைவில் துவங்குமாறு கூறியிருக்கிறார்.
அதனால் ஏஆர் முருகதாஸ் திரும்பி வரும் 4 மாதங்களுக்குள் சிபி சக்ரவர்த்தி இயக்கும் தனது 24வது படத்தை நடித்து முடிக்கவும், இடையிடையே வாய்ப்பு கிடைக்கும் போது சுதா கொங்கரா இயக்கும் எஸ்கே 25 படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ள சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார். எனினும் சிக்கந்தர் படத்துக்காக எஸ்கே 23 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மீது எஸ்கே ரசிகர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.





