- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி திரைப்படத்தின் நிலைமை இதுதான்... ஒன்னு விடாமல் புட்டு புட்டு வைத்த அஜித்தின் மேலாளர் சுரேஷ்...

விடாமுயற்சி திரைப்படத்தின் நிலைமை இதுதான்… ஒன்னு விடாமல் புட்டு புட்டு வைத்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா… இதைத்தானே இத்தனை நாளாக கேட்டுக் கொண்டிருந்தோம் என ரசிகர்கள் ஆறுதல்…

- Advertisement -

துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்குமார் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணைய இருந்தார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் இந்த படத்தில் இருந்து விலகினார் விக்னேஷ் சிவன். தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தினாலே இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

- Advertisement -

இதன்பிறகு அஜித் படத்தை பலர் இயக்குவதாக கூறப்பட்டாலும் அந்த ரேசில் வெற்றி பெற்றார் இயக்குனர் மகிழ்திருமேனி. விடாமுயற்சி என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனை மகிழ்ந்திருமேனியே இயக்குவதாகவும் லைக்கா நிறுவனம் கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளன்று அறிவித்தது.

 

- Advertisement -

ஆனால் இதன் பிறகு படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஐந்து மாதங்களுக்கு மேலானதால் படம் கைவிடப்பட்டதோ என்று ரசிகர்கள் பயந்தனர். அஜித்தும் எதையும் கண்டுகொள்ளாமல் தனது பைக்கை எடுத்து ஊர் முழுக்க சுற்றி வந்தார். இப்படி ஆன சூழலில், அக்டோபர் மாதம் விடா முயற்சியின் படப்பிடிப்பு தொடங்கியது.

 

முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்த மகிழ் திருமேனி, அதற்கான பணிகளில் ஈடுபட்டார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா இடம் பெற்றார். அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட வரும் படத்தில் இருந்தனர். ஆனால் படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் தயாரிப்பவர்களிடம் வெளியிடவே இல்லை.

 

இதனால் அஜித் ரசிகர்கள் நொந்து போயினர். இந்த வேளையில் அஜித்தின் மேலாளர் ஆன சுரேஷ் சந்திரா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஆரவ்வுடன் அஜித் காரில் பயணம் செய்வது போன்ற ஒரு காட்சியில், வாகனம் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இதில் இருவரும் உயிர் தப்பினர். இந்தக் காட்சியை பார்த்துவிட்டு அஜித் ரசிகர்கள் பதறிப் போயினர்.

 

இதனிடையே, விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகளில் இடையே சுணக்கம் ஏற்பட்டு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதி செய்து இருக்கிறார். சூட்டிங்கில் அஜித் பங்கேற்றுள்ளதாகவும், வரும் நாட்களில் திரிஷா மற்றும் அர்ஜூன் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். அடுத்த மாதம் 22 ஆம் தேதி வரை அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சியின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறும் என்று கூறி இருக்கும் அவர், அதன் பிறகு பத்து நாட்கள் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்