- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் களத்தில் அதிரடி ஆட்டம் ஆடும் தவெக தலைவர் விஜய், மத்திய அமைச்சரை கண்டித்து ஆவேசம்...

அரசியல் களத்தில் அதிரடி ஆட்டம் ஆடும் தவெக தலைவர் விஜய், மத்திய அமைச்சரை கண்டித்து ஆவேசம் – அந்த பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்போம் என்றும் தளபதி சவால்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ளார். இப்போது தனது 69வது படத்தில் நடித்துவரும் அவர், இந்த படத்தை முடித்துவிட்டு, சினிமாவுக்கு டாடா காட்டிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக மக்களை சந்திக்க இருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் மாநாடு, விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் மற்றும் வேலுநாச்சியார் ஆகியோரை அறிவித்தார். இவர்களின் கொள்கைகளை பின்பற்றியதே எனது அரசியல் பயணம் என்றும் சூளுரைத்தார்.

- Advertisement -

மேலும் இம்மாதம் 6ம் தேதி, சென்னையில் நடந்த எல்லோருக்கமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், அந்த நூலை வெளியிட்டார். அந்த விழாவுக்கு தொல் திருமாவளவன் வராததற்கு திமுக கூட்டணி கட்சிகளின் அழுத்தமும், நெருக்கடியும்தான் காரணம் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்வது இப்போது பேஷனாகி விட்டது. அதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறியிருந்தால் சொர்க்கத்துக்காவது போயிருக்கலாம் என்று கடுமையாக பேசியிருந்தார். இதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வருகின்றன.

- Advertisement -

தற்போது தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், அமித்ஷா பேசியது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திர காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிமுகம் ஆளுமை அவர்.

அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்…. அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம். எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று நடிகர் விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்