- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 22ம் தேதி முதல் கேரளாவில் சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக், புதிய படங்கள் எதுவும் திரையிடப்படாது...

வரும் 22ம் தேதி முதல் கேரளாவில் சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக், புதிய படங்கள் எதுவும் திரையிடப்படாது எனவும் அறிவிப்பு – தமிழகத்திலும் இந்த பிரச்னை பரவுமா?

- Advertisement -

வரும் 22ம் தேதி வியாழக்கிழமை முதல் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, புதிய படங்கள் எதுவும் திரையிட முடியாது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக, சில கோரிக்கைகளை முன்னிறுத்தி, இந்த ஸ்டிரைக் போராட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா தியேட்டர்களில் ரசிகர்களின் வருகை நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது. அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் நாட்களில் மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகின்றனர். அந்த படங்களும் பிளாப் என தெரிந்து விட்டால் தியேட்டர் பக்கம் எட்டிப் பார்க்கவே ஆள் இருப்பது இல்லை.

- Advertisement -

இந்த நிலை தமிழ்நாட்டில் அதிக நாட்களாக நீடித்து வருகிறது. அதே போல் கேரளாவிலும் இந்த அவல நிலை நீடிக்கிறது. தெலுங்கானா, ஆந்திராவில் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடிக்க முடியும் அளவுக்கு, ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களில் காணப்படுகிறது. நல்ல படங்களை தரும் கேரளாவில் இந்த அவல நிலை என்பது, கலைத்துறையினர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.

ஒரு படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன ஆறு வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்ற தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் விதிமுறையயை, தயாரிப்பாளர்கள் மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சில தயாரிப்பாளர்கள், சினிமா துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுகின்றனர் என்ற புகாரும் இருந்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரை வரும் 22ம் தேதி முதல், தியேட்டர்களில் படங்களை திரையிட மாட்டோம் என, தியேட்டர் உரிமையாளர் சங்கம் சார்பில் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் வெளியாகும் புதிய படங்கள், 4 வாரங்களுக்கு பிறகு, ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் பாலிவுட்டில் வெளியாகும் இந்தி படங்கள் 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அப்படி ஒப்பந்தம் செய்யாத படங்களை, தங்களது மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அவர்கள் திரையிடுவதில்லை. அதே முறைகளை தமிழ்நாடு, கேரளாவிலும் நடைமுறைப்படுத்தினால், தியேட்டர்களுக்கு கூடுதலாக ரசிகர் வருகை இருக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்